MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கோடை வெயிலில் வாட்டர் டேங்க் சூடாகிறதா? கூலாக இருக்க உடனே இதை மட்டும் செஞ்சு பாருங்க!

கோடை வெயிலில் வாட்டர் டேங்க் சூடாகிறதா? கூலாக இருக்க உடனே இதை மட்டும் செஞ்சு பாருங்க!

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வருவதால், வீட்டு மாடி தண்ணீர் தொட்டிகளில் நீர் சூடாகிறது. இதைத் தவிர்க்க, தொட்டியை ஈரமான சாக்கு அல்லது வெள்ளைத் துணியால் மூடுவது போன்ற எளிய வழிமுறைகள்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 21 2026, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Google

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கியதை அடுத்து கோடை வெயில் மண்டைய பொளந்து வருகிறது. இந்நிலையில் சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில் வீட்டு மாடியில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் சூடாக மாறுவது வழக்கம். இதனால் தினசரி பயன்பாட்டிற்கே இந்த நீர் உகந்ததாக இருப்பதில்லை. இந்நிலையில் கோடை காலத்திலும் சில யோசனைகளை பின்பற்றினால் தொட்டியில் உள்ள நீரை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : google

ஈரமான சாக்கு அல்லது தடிமனான துண்டு மற்றும் போர்வையை தொட்டியின் மேல் வைக்கலாம். இது தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். வெயில் அதிகமாக இருக்கும்போது, ​​சாக்கை அடிக்கடி ஈரப்படுத்துங்கள். இது தொட்டியின் வெப்பநிலையை குறைவாக வைத்திருக்கும், தண்ணீரும் குளிர்ச்சியாக இருக்கும்.

35
Image Credit : AI generated image

வெள்ளை அல்லது வெளிர் நிறம் சூரிய ஒளியின் விளைவைக் குறைக்கிறது. இது வெப்பத்தின் விளைவைக் குறைக்கிறது. நீங்கள் தொட்டியை ஒரு வெள்ளைத் துணியால் மூடலாம் அல்லது அலுமினியத் தாளைப் பயன்படுத்தலாம். இதன் காரணமாக சூரியனின் வெப்பம் தொட்டியின் உள்ளே செல்லாது, மேலும் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். உங்கள் வீட்டு வாட்டர் டேங்க் கருப்பு அல்லது அடர் நிறத்தில் இருந்தால், அதை வெளிர் நிறத்திற்கு மாற்றவும். வெளிர் நிறங்கள் சூரிய ஒளியை குறைவாகவே உறிஞ்சும். இதன் காரணமாக தொட்டியில் உள்ள நீர் குளிர்ச்சியாக இருக்கும்.

45
Image Credit : our own

உங்கள் வீட்டில் தொட்டி திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தால், அதைச் சுற்றி புல் அல்லது ஈரமான மண்ணைப் போடுங்கள். இது வெப்பத்தைக் குறைத்து, தண்ணீர் குளிர்ச்சியாக இருக்க உதவும். இந்த முறை கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. நீங்கள் இதை நகரங்களிலும் முயற்சி செய்யலாம். தொட்டியைச் சுற்றிலும் இடமிருந்தால் நிழல் தரும் மரக்கன்றுகளை நடலாம்.

55
Image Credit : Asianet News

முடிந்தால், தண்ணீர் தொட்டியை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க நிழலான இடத்தில் வைக்கவும். அல்லது அதன் மேல் ஒரு தகரக் கொட்டகையையும் அமைக்கலாம். இதன் காரணமாக, நேரடி சூரிய ஒளி தொட்டியின் மீது படாது, தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தொட்டியின் உள்ளே படிந்துள்ள பாசி, அழுக்குகளை அகற்றி சுத்தம் செய்வது, நீர் வெப்பமடைவதைத் தடுக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நீர் சேமிப்பு குறிப்புகள்
வாழ்க்கை முறை
வெப்ப அலை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Microwave Oven: மைக்ரோவேவ் ஓவன் சுத்தம் செய்ய காசு செலவு செய்யாதீங்க! இந்த பொருளே போதும்
Recommended image2
Walking Tips: குறைந்த நேரத்தில் அதிக பலன்.. 'ஜப்பானிய வாக்கிங்' டெக்னிக் பாலோ பண்ணுங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்!
Recommended image3
Phone Pocket: உஷார்..! சட்டைப் பாக்கெட்டில் போன் வைப்பவர்களே.. இந்த விஷயம் தெரிஞ்சுக்கோங்க!
Related Stories
Recommended image1
அதிகம் விற்பனையாகும் பீர் இதுதான்! டாப் 5 லிஸ்ட் இதோ! கிங்பிஷர் எத்தனையாவது இடம்?
Recommended image2
Dosa Batter: இப்படி மாவு அரைச்சா, ஹோட்டல் தோசையை இனி வீட்டுல சாப்பிடலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved