- Home
- Lifestyle
- Washing Machine Tips: வாஷிங் மெஷின் கரண்ட்டை உறிஞ்சுகிறதா? EB பில்லை பாதியாக குறைக்க 5 டிப்ஸ்!
Washing Machine Tips: வாஷிங் மெஷின் கரண்ட்டை உறிஞ்சுகிறதா? EB பில்லை பாதியாக குறைக்க 5 டிப்ஸ்!
Washing Machine Tips: வீடுகளில் இருக்கும் வாஷிங் மெஷின் கரண்டை ஊறிஞ்சி நமது பிரஷரை எகிற வைத்து விடுகிறது. சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் வாஷிங் மெஷின் மின்சார கட்டணத்தை பாதியாக குறைக்கலாம். அவை என்னென்ன வழிமுறைகள்? என்பது குறித்து பார்க்கலாம்,

வாஷிங் மெஷின் EB பில்லை பாதியாக குறைக்க 5 டிப்ஸ்
இன்று பெரும்பாலான வீடுகளில் வாஷிங்மெஷினும் ஒரு உறுப்பினராகி விட்டது. நமது வீடுகளில் மலை போல் குவியும் துணிகளை துவைப்பதற்கு வாஷிங்மெஷின் அத்தியாவசிய தேவையாகி விட்டது. வாஷிங் மெஷின் துணிகளை அசால்ட்டாக துவைத்து மக்களுக்கு கைகொடுத்தாலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டணம் பலரின் தூக்கத்தை கெடுத்து விடுகிறது. வாஷிங் மெஷின் அதிக முறை பயன்படுத்தினால் கரண்ட் பில் எகிறும் என்று பலரும் பயப்படுகின்றனர். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், வாஷிங் மெஷின் பயன்படுத்தினாலும் மின்சாரக் கட்டணத்தை பாதியாக குறைக்க முடியும். அது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்த துணிகளை குளிர்ந்த நீரிலேயே துவைக்கலாம்
வாஷிங் மெஷின் இயங்கும் போது செலவாகும் மின்சாரத்தில் சுமார் 90 சதவீதம், தண்ணீரை சூடாக்குவதற்காகவே (Water Heater) பயன்படுத்தப்படுகிறது. துணிகளில் அதிகப்படியான கறை அல்லது எண்ணெய் பசை இல்லாத பட்சத்தில், சாதாரண குளிர்ந்த நீரிலேயே (Cold Water) துவைக்கலாம். இது மின் நுகர்வை பாதியாகக் குறைக்கும்.
சரியான அளவில் துணிகளை போடுங்கள்
இரண்டு அல்லது மூன்று துணிகளுக்காக அடிக்கடி மெஷினை ஆன் செய்யக் கூடாது. அதே சமயம், மெஷினின் கொள்ளளவை மீறி முட்டி முட்டி துணிகளைத் திணிப்பதும் தவறு ஆகும். அதிக துணிகளை போடும் போது மோட்டாருக்குக் கூடுதல் சுமை ஏற்பட்டு, அது அதிக மின்சாரத்தை இழுக்கும். எனவே, மெஷினின் டிரம் பகுதியில் 80 சதவீத அளவிற்கு மட்டுமே துணிகளை நிரப்ப வேண்டும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மொத்தமாக சேர்த்து வைத்துத் துவைப்பது நல்ல பலன் தரும்.
இதையும் படிங்க: உங்க வீட்டு ஃபிரிட்ஜில் கரண்ட் பில் பாதியாக குறைய சீக்ரெட் ட்ரிக்! https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-reduce-fridge-electricity-bill-a4-paper-trick-grzxz9n
டிடர்ஜென்ட் அளவும் மிக முக்கியம்
வாஷிங் மெஷினில் அதிகப்படியான டிடர்ஜென்ட் (Suds) பயன்படுத்தினால், நுரையை நீக்குவதற்காக மெஷின் மீண்டும் மீண்டும் தண்ணீரை எடுத்துக்கொண்டு கூடுதல் முறை சுழலும். இது மோட்டாரின் வேலை நேரத்தையும், மின்சார நுகர்வையும் அதிகரிக்கும். எனவே, தேவைக்கேற்ப சரியான அளவு சோப்புத் தூள் பயன்படுத்துவது அவசியம். அதேபோல, மாதத்திற்கு ஒருமுறை மெஷினை 'டப் கிளீன்' (Tub Clean) செய்வதன் மூலம் அதன் செயல்திறன் மாறாமல் இருக்கும்.
டிரையர் பயன்பாடு அதிகம் வேண்டாம்
இப்போது வரும் நவீன வாஷிங் மெஷின்களில் 'Eco Mode' என்ற அம்சம் உள்ளது. இது குறைந்த அளவு தண்ணீரையும், மின்சாரத்தையும் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோடைக்காலம் மற்றும் வெயில் நன்றாக இருக்கும் நாட்களில் மெஷினில் உள்ள டிரையரை (Spin Dryer) அதிக நேரம் இயக்க வேண்டியதில்லை. லேசாகப் பிழிந்தெடுத்துவிட்டு நேரடியாக வெயிலில் காயப்போடலாம்.
5 ஸ்டார் ரேட்டிங் வாஷிங் மெஷின் வாங்குங்கள்
புதிதாக வாஷிங் மெஷின் வாங்குபவர்கள் 5-ஸ்டார் ரேட்டிங் (5-Star Rating) மற்றும் இன்வெர்ட்டர் டெக்னாலஜி (Inverter Technology) கொண்ட மாடல்களைத் தேர்ந்தெடுப்பது நீண்ட கால அடிப்படையில் மின் கட்டணத்தைச் சேமிக்க உதவும். இந்த எளிய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம், மின்சாரத்தை மிச்சப்படுத்துவதோடு உங்களுடைய பணத்தையும், வாஷிங் மெஷினின் ஆயுளையும் ஒருசேர அதிகரிக்கலாம்.
இதையும் படிங்க: அயர்ன் பாக்ஸ் இல்லாமல் 5 நிமிடத்தில் துணி சுருக்கத்தை போக்க மேஜிக் டிரிக்ஸ்!: https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-remove-wrinkles-from-clothes-without-an-iron-4-quick-5-minute-hacks-itkuglu
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

