- Home
- Lifestyle
- Toilet Paper : வெளிநாட்டு டாய்லெட்களில் ஏன் தண்ணீருக்கு பதில் பேப்பர் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
Toilet Paper : வெளிநாட்டு டாய்லெட்களில் ஏன் தண்ணீருக்கு பதில் பேப்பர் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
Why Americans use toilet paper? இந்தியாவில் டாய்லெட்களில் தண்ணீர் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தண்ணீர் வசதி இருந்தும், டிஷ்யூ பேப்பரை ஏன் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
15

Image Credit : AI Image
Toilet paper vs water
இந்தியா மற்றும் பல ஆசிய நாடுகள்ல டாய்லெட் போனா தண்ணி பயன்படுத்துறதுதான் வழக்கம். ஆனா, அமெரிக்கா, ஐரோப்பா மாதிரியான வெளிநாடுகள்ல டாய்லெட் பேப்பர் அல்லது டிஷ்யூ மட்டும்தான் பயன்படுத்துறாங்க. இப்படி தண்ணியால கழுவாம, துடைக்கிறதுக்கு பின்னாடி சில முக்கியமான புவியியல், கலாச்சார, தொழில்நுட்ப காரணங்கள் இருக்கு. அது என்னனு பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : Getty
தண்ணீரை தவிர்ப்பது ஏன்?
மேற்கத்திய நாடுகள்ல வருஷத்துல பெரும்பகுதி கடுமையான குளிர் இருக்கும். குளிர்காலத்துல வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு போயிடும். அப்போ பைப்ல வர்ற தண்ணி ஒன்னு உறைஞ்சிடும், இல்லனா ஐஸ் மாதிரி சில்லுனு இருக்கும். அந்த தண்ணிய டாய்லெட்ல பயன்படுத்துறது ரொம்ப கஷ்டம். எல்லா டாய்லெட்டுக்கும் ஹீட்டர் வைக்கிறது ரொம்ப செலவாகும். அதனாலதான், அவங்க காலநிலைக்கு ஏத்த மாதிரி டிஷ்யூ பேப்பருக்கு மாறினாங்க.
35
Image Credit : Getty
கரையும் பேப்பர்
வெளிநாடுகள்ல இருக்குற கழிவுநீர் வடிகால் (drainage pipes) அமைப்பு ரொம்பவே வித்தியாசமானது. அவங்க பயன்படுத்துற டாய்லெட் பேப்பர், தண்ணியில சீக்கிரமா கரையுற மாதிரி (Bio-degradable) பிரத்யேகமா தயாரிக்கப்படுது. ப்ளஷ் பண்ணதும் அது பைப்ல கரைஞ்சிடும். ஒருவேளை தண்ணிய அதிகமா பயன்படுத்தினா, பாத்ரூம் முழுக்க ஈரமாகி, பாக்டீரியா, பூஞ்சை வர வாய்ப்பிருக்கு. அவங்க பாத்ரூமை எப்போதுமே உலர்ந்த நிலையில வெச்சுக்கதான் விரும்புவாங்க.
45
Image Credit : X
தண்ணிய விட பேப்பருக்கு முக்கியத்துவம்
நமக்கு சின்ன வயசுல இருந்தே தண்ணிய யூஸ் பண்ணி பழக்கப்படுத்துற மாதிரி, பல வெளிநாடுகள்ல அவங்க குழந்தைகளுக்கு டாய்லெட் பேப்பர் பயன்படுத்ததான் கத்துக்கொடுக்குறாங்க. அவங்க கலாச்சாரத்துல, தண்ணிய விட பேப்பர் பயன்படுத்துறதுதான் சுத்தமான விஷயம்னு நினைக்கிறாங்க. பயணத்தின்போதும் டிஷ்யூ பேப்பர் சுலபமா கிடைக்கும்.
55
Image Credit : Getty
புது சிக்கல்
ஆனா, சமீபகாலமா டாய்லெட் பேப்பர் பயன்படுத்துறதால சிலருக்கு சருமப் பிரச்சினைகள் அதிகமாகுது. அதுமட்டுமில்லாம, பேப்பர் தயாரிக்க லட்சக்கணக்கான மரங்களை வெட்ட வேண்டியிருக்கு. இதனால, மாற்று வழிகளை தேட ஆரம்பிச்சிருக்காங்க. இப்போ வெளிநாடுகள்லயும் 'பிடேட்' (Bidet - தண்ணீர் ஸ்ப்ரேயர்) பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகுது. ஆனாலும், காலநிலையால உருவான இந்த பழக்கம், இன்னைக்கு அவங்க வாழ்க்கை முறையோட ஒரு பகுதியா மாறிடுச்சு.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

