MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • டாய்லட்டில் சாப்பாடு, யூரினல்ல ஜூஸ்... தைவானில் இப்படியொரு உணவகமா? இந்திய பெண்ணின் வைரல் பதிவு!

டாய்லட்டில் சாப்பாடு, யூரினல்ல ஜூஸ்... தைவானில் இப்படியொரு உணவகமா? இந்திய பெண்ணின் வைரல் பதிவு!

கமோட்டில் சாப்பாடு, யூரினலில் ஜூஸ்.. தைவானில் உள்ள விநோத 'மாடர்ன் டாய்லெட்' உணவகத்திற்குச் சென்ற இந்திய வ்லாக்கரின் வைரல் பதிவு; விநோத முயற்சியை எடுத்துள்ளது தைவானின் பிரபல உணவகம்!

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 24 2026, 06:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கமோட் கிண்ணங்களில் உணவு... சிறுநீர் பாத்திரங்களில் பானங்கள்!
Image Credit : x

கமோட் கிண்ணங்களில் உணவு... சிறுநீர் பாத்திரங்களில் பானங்கள்!

தீம் உணவகங்களின் (Themed Dining) எல்லைகளை உடைத்து, பார்ப்பவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் விநோத முயற்சியை எடுத்துள்ளது தைவானில் உள்ள பிரபல உணவகம். அங்கு வழக்கமான தட்டுகளுக்குப் பதிலாக கழிவறை கமோட் (Commode) வடிவிலான கிண்ணங்களில் உணவும், சிறுநீர் கழிக்கும் சிறுபாத்திரங்கள் போன்ற குவளைகளில் ஜுஸ்கள் பரிமாறப்படுகின்றன. இந்தியாவை சேர்ந்த பிரபல இணைய கண்டெண்ட் கிரியேட்டர் (Content Creator) ஆகான்ஷா மோங்கா (Aakansha Monga) இந்த விநோத உணவகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அங்குள்ள உணவின் சுவைக்கு 10-க்கு 5 மதிப்பெண் மட்டுமே வழங்கிய அவர், உணவகத்தின் ஒட்டுமொத்த புதுமையான அனுபவத்திற்கு முழுமையாக 10-க்கு 10 மதிப்பெண் கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தைவானின் விநோத உணவகம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Image Credit : x

தைவானின் விநோத உணவகம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தினசரி பயன்பாட்டில் உள்ள கழிவறையையே (Bathroom) மையக் கருத்தாகக் கொண்டு இயங்கி வருகிறது தைவானின் 'மாடர்ன் டாய்லெட்' (Modern Toilet) உணவகம். இங்கு வழக்கமான நாற்காலிகளுக்குப் பதிலாக கழிவறை இருக்கைகளும் (Toilet Seats), உணவுகளைப் பரிமாற மினியேச்சர் கமோட் வடிவிலான பீங்கான் கிண்ணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தீம் உணவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. குடிக்க வழங்கப்படும் குளிர்பானங்கள் ஆண்களுக்கான சிறுநீர்க் கழிப்பிடம் போன்ற வடிவிலான பாத்திரங்களில் ஊற்றித் தரப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அமரும் இருக்கை முதல் உண்ணும் உணவு வரை கழிவறையின் பிரதிபலிப்பே எங்கும் நிறைந்திருக்கிறது. உணவைச் சாப்பிட ஸ்பூனை எடுப்பதற்கு முன் பலரும் ஒரு கணம் தயங்கும் அளவிற்கு இதன் சூழல் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான உணவைக்கூட ஆச்சரியம், கேலி மற்றும் பசியைச் சோதிக்கும் ஒரு சவாலான அனுபவமாக மாற்றுவதே இந்த உணவகத்தின் நோக்கம்.

இந்த உணவகத்திற்குச் சென்ற முழு அனுபவத்தையும் ஆகான்ஷா மோங்கா வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். கமோட் வடிவிலான கிண்ணங்கள் முதல் சிறுநீர்க் கழிப்பிடக் குவளைகள் வரை உணவகம் எவ்வாறு தனது கான்செப்ட்டை அச்சுப்பிசகாமல் கடைப்பிடிக்கிறது என்பதை அவரது காட்சிகள் வெளிப்படுத்தின.

34
என் வாழ்நாளில் டார்க் சாக்லேட்டை நினைத்து பார்க்க முடியாது
Image Credit : x

என் வாழ்நாளில் டார்க் சாக்லேட்டை நினைத்து பார்க்க முடியாது

அனைத்திற்கும் மேலாக, அங்கு வழங்கப்பட்ட ஒரு சாக்லேட் இனிப்புப் பண்டம் (Chocolate Dessert) அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மனிதக் கழிவு போன்றே அச்சு அசல் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த டார்க் சாக்லேட் ஐஸ்கிரீமைப் பார்த்து வியந்த மோங்கா, இனி என் வாழ்நாளில் டார்க் சாக்லேட் ஐஸ்கிரீமை வழக்கம்போல சாதாரணமாகப் பார்க்கவே முடியாது என்று சிரித்தபடி தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் பலதரப்பட்ட கருத்துகளைப் பெற்றுள்ளது.

சிலர் இந்த யோசனையைப் புதுமையான படைப்பாற்றல் என்றும் வேடிக்கையானது என்றும் பாராட்டினாலும், மற்றவர்களோ கழிவறை வடிவிலான தட்டுகளில் சாப்பிடும் விபரீத ஆசையை விமர்சித்துள்ளனர். வழக்கமாக அனைத்து உணவகங்களும் மறைக்க நினைக்கும் கழிவறையையே தங்களது முதன்மை அடையாளமாக மாற்றி வெற்றி கண்டுள்ளது இந்த 'மாடர்ன் டாய்லெட்'. மக்கள் உணவிற்காக வருகிறார்களோ இல்லையோ, அங்கு வந்து செல்லும் ஒவ்வொருவரையும் இதைப் பற்றிப் பேச வைக்க வேண்டும் என்பதில் இந்த உணவகம் முழு வெற்றி பெற்றுள்ளது.

44
தைவானின் விசித்திர மாடர்ன் உணவகத்தில் ட்ரை பண்ணுங்க!
Image Credit : x

தைவானின் விசித்திர மாடர்ன் உணவகத்தில் ட்ரை பண்ணுங்க!

தைவானில் உள்ள 'மாடர்ன் டாய்லெட்' (Modern Toilet) என்ற பிரபல உணவகம், கழிவறையையே முழுமையான தீமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. வழக்கமான தட்டுகளுக்குப் பதில் கமோட் வடிவிலான கிண்ணங்களில் உணவும், சிறுநீர் கழிக்கும் பாத்திர வடிவிலான குவளைகளில் பானங்களும் இங்கு பரிமாறப்படுகின்றன.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உலகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
நீண்ட நேரம் உட்காரும் பழக்கம் இருக்கா? முழங்கால் வலி வருவதற்கு 5 பழக்கங்கள் தான் காரணம்!
Recommended image2
பாகுபதம் தேவையில்லை…! தீபாவளிக்கு பஞ்சுபோல மென்மையான அதிரசம் செய்ய இந்த ஒரு ட்ரிக் போதும்!
Recommended image3
Best Liver: ஈரல் பிரியர்களே கவனம்.. யாருக்கு எந்த ஈரல் பெஸ்ட் தெரியுமா?
Related Stories
Recommended image1
இந்தியாவில் 3 பிளேடுகள்.. அமெரிக்காவில் 5! மின்விசிறியில் இருக்கும் வித்தியாசத்திற்கான காரணம்..
Recommended image2
Vietjet 11 Flight Offer: ரூ.11-ல் விமான டிக்கெட்! மாலத்தீவுக்கு புதிய வழித்தடம் தொடங்கும் தேதி அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved