Kitchen Hacks : வெங்காயம் வெட்டும் போது இனி கண்ணீர் வராது! இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!
Kitchen Hacks : சமையலறையில் பல பேருக்கு ஒரு பெரிய சவாலாக இருப்பது வெங்காயம் நறுக்குவதுதான். எவ்வளவு பெரிய சமையல் நிபுணராக இருந்தாலும், வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வராமல் இருக்காது. கண்ணீர் வராமல் எப்படி வெங்காயம் நறுக்குவது என்று காண்போம்.

வெங்காயம் ஏன் நம்மள அழ வைக்குது? அறிவியல் காரணம் என்ன?
வெங்காயம் மண்ணுக்கடியில வளரும்போது, அது மண்ணுல இருக்குற கந்தகச் சத்துக்களை (sulphur) உறிஞ்சி தன்னோட செல்களுக்குள்ள சேமிச்சு வைக்குது. நாம வெங்காயத்தை நறுக்கும்போது, அந்த செல்கள் உடைஞ்சு, அதுல இருந்து என்சைம்களும், கந்தகச் சேர்மங்களும் (sulphur compounds) வெளியில வருது. இந்த ரெண்டும் ஒண்ணு சேர்ந்து ஒரு வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துது. இதுல இருந்து 'சின்-புரோபனேதியல் எஸ்-ஆக்சைடு' (syn-propanethial S-oxide) அப்படின்ற ஒரு வாயு உருவாகுதுங்க.
இந்த வாயு காத்துல பரவி நம்ம கண்ணுக்குள்ள போயிடும். நம்ம கண்ணுல இருக்கிற ஈரப்பதத்தோட இந்த வாயு கலக்கும்போது, அது லேசான சல்ஃபியூரிக் அமிலமா மாறுது. நம்ம கண்கள் ரொம்ப உணர்வுத்திறன் கொண்டது இல்லையா? இந்த அமிலம் கண்களை எரிச்சலூட்டி, கண்ணீர் சுரப்பிகளைத் தூண்டுது. அதனாலதான் கண்ணுல இருந்து தண்ணி கொட்டுது.
இந்த கண்ணீர்ப் பிரச்னையில இருந்து தப்பிக்க சில சுலபமான வழிகள் இருக்கு. இதைப் பின்பற்றிப் பாருங்க, இனி வெங்காயம் நறுக்கும்போது அழத் தேவையில்லை!
1.வெங்காயத்தை குளிர்விங்க!
வெங்காயத்தை வெட்டுவதற்கு ஒரு 10-15 நிமிஷத்துக்கு முன்னாடி, ஃபிரிட்ஜ்ல அல்லது ஃப்ரீஸர்ல வச்சு எடுங்க. குளிர்ச்சி அந்த வாயுவோட வீரியத்தைக் குறைக்கும். அதனால காற்றில் அந்த வாயு பரவுவது தடுக்கப்பட்டு கண்ணீர் வராது.
2.தண்ணீரில் நறுக்குங்க!
வெங்காயத்தோட தோலை உரிச்சதுக்கு அப்புறம், அதை குளிர்ந்த நீர்ல 10-15 நிமிஷம் ஊற வச்சுட்டு நறுக்குங்க. அப்படி இல்லன்னா, ஒரு பாத்திரத்துல தண்ணிய ஊத்தி, அதுக்குள்ளயே வெங்காயத்தை நறுக்கலாம். சுடு தண்ணில 30 செகண்ட்ஸ் ஊற வச்சு நறுக்குனாலும் கண்ணீர் வராது. இப்படி செய்றதுனால, சல்பரோட வீரியம் குறைஞ்சு, கண்ணீர் வருவது தடுக்கப்படும்.
3.கூர்மையான கத்தி ரொம்ப முக்கியம்!
மழுங்கலான கத்தியால வெங்காயம் நறுக்கும்போது, செல்கள் அதிகமா நசுக்கப்படும். அதனால, நிறைய எரிச்சலூட்டும் வாயு வெளியாகும். கூர்மையான கத்தியைப் பயன்படுத்தி மெதுவா நறுக்குங்க. அப்போ வாயு வெளியாவது குறைஞ்சு, கண்ணீர் வராது.
4. ஃபேன் அல்லது ஜன்னல்!
வெங்காயம் நறுக்கும்போது ஜன்னலைத் திறந்து வச்சுக்கங்க. இல்லன்னா, ஃபேன் அடியில உட்கார்ந்து நறுக்குங்க. இப்படி செய்றதுனால, அந்த எரிச்சலூட்டும் வாயு காற்றில் பரவி கண்ணுல படாம சிதறிடும்.
தினமும் RO Water குடிக்கிறீர்களா? உங்கள் உடலில் நடக்கும் ஆபத்தான மாற்றங்கள்!
5.சில எக்ஸ்ட்ரா டிப்ஸ்!
சில பேர் வெங்காயம் நறுக்கும்போது சூயிங்கம் மெல்வாங்க. இன்னும் சிலர் பக்கத்துல ஒரு மெழுகுவர்த்தியை ஏத்தி வச்சுக்குவாங்க. மெழுகுவர்த்தி வெப்பத்தால வாயுவை தடுத்து நிறுத்துமாம். ஒரு ஈரமான டிஷ்யூ பேப்பரை வெங்காயத்துக்கு பக்கத்துல வச்சாலும் அது அமிலத்தன்மையை உறிஞ்சிக்கும். வாயில தண்ணி ஊத்தி வச்சுட்டு நறுக்குவதும் ஒரு வழி. நறுக்கும் பலகையில கொஞ்சூண்டு வினிகரை தடவி வெட்டுவதும் நல்ல பலன் கொடுக்கும்.
இனிமேல் வெங்காயம் நறுக்குவது ஒரு பெரிய பிரச்னையா இருக்காதுன்னு நம்புறோம். இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி, கண்ணீர் இல்லாம சமையலை என்ஜாய் பண்ணுங்க!
90% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது! சாதாரண மனிதனை கோடீஸ்வரனாக்கும் 70/30 விதி!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

