MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தினமும் RO Water குடிக்கிறீர்களா? உங்கள் உடலில் நடக்கும் ஆபத்தான மாற்றங்கள்!

தினமும் RO Water குடிக்கிறீர்களா? உங்கள் உடலில் நடக்கும் ஆபத்தான மாற்றங்கள்!

‘RO தண்ணீர் ஒரு கட்டத்திற்கு மேல் உடலுக்கு கேடு விளைவிக்கலாம்.’ என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுக்கிறது? ஏன் அப்படி சொல்கிறது? இதற்கு பின்னால் உள்ள அறவியலைக் கொஞ்சம் பார்ப்போம்.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 23 2026, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
RO தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?
Image Credit : Chatgpt

RO தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?

முதலில் RO என்ன செய்கிறது என்று பார்ப்போம். தண்ணீரில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூசிகள், ஈயம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் (Heavy metals), மற்றும் பாக்டீரியா, வைரஸ்களை வடிகட்டுவதில் RO ஒரு கில்லாடி.

அதிநவீன சவ்வுகள் (Semi-permeable membrane) வழியாக தண்ணீரை அதிக அழுத்தத்தில் செலுத்தி, அதில் உள்ள அசுத்தங்களை இது பிரித்தெடுக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அறிவியலின் மறுபக்கம்
Image Credit : Chatgpt

அறிவியலின் மறுபக்கம்

RO மிஷின் கெட்ட விஷயங்களை மட்டும் பிரித்தால் பரவாயில்லை; தண்ணீரில் இயற்கையாகவே இருக்க வேண்டிய, நம் உடலுக்கு மிக அத்தியாவசியமான தாதுக்களை (Minerals) சேர்த்தே வடிகட்டி விடுகிறது.

  • கால்சியம் (Calcium): எலும்புகளுக்கும் பற்களுக்கும் பலம் சேர்ப்பது.
  • மெக்னீசியம் (Magnesium): இதயத் துடிப்பை சீராக வைப்பது மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாப்பது.

RO செயல்முறையின் போது, இந்த நல்ல தாதுக்கள் 90% முதல் 99% வரை நீக்கப்பட்டு விடுகின்றன. அறிவியல் பூர்வமாக, இப்படி தாதுக்கள் இல்லாத தண்ணீரை "Demineralized Water" அல்லது "Dead Water" என்று அழைக்கிறார்கள்.

Related Articles

Related image1
உங்க கேஸ் ஸ்டவ் ஆரஞ்சு நிறத்துல எரியுதா? அப்படீன்னா உயிருக்கே ஆபத்து! உடனே இத செய்யுங்க!
Related image2
Fridge Blast : குளிர்சாதனப் பெட்டி வெடிப்பதற்கான 7 காரணங்கள்! தடுப்பது எப்படி?
34
RO தண்ணீரை தொடர்ந்து குடித்தால் என்ன ஆகும்?
Image Credit : Chatgpt

RO தண்ணீரை தொடர்ந்து குடித்தால் என்ன ஆகும்?

தாதுக்கள் இல்லாத தண்ணீரை நாம் தொடர்ந்து குடிக்கும் போது, நம் உடலில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன:

  • உடலில் இருந்து தாதுக்கள் உறிஞ்சப்படுதல்: RO தண்ணீரில் தாதுக்கள் இல்லாததால், அது பசி தாகத்தோடு இருக்கும். அதை நீங்கள் குடிக்கும் போது, உங்கள் உடலில் (எலும்புகள், பற்களில்) ஏற்கனவே இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தை அந்த தண்ணீர் உறிஞ்சிக் கொண்டு சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும்.
  • சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு: உடலில் மெக்னீசியம் குறைந்தால், சீக்கிரமே சோர்வு அடைதல், தசைப்பிடிப்பு (Muscle cramps) மற்றும் பலவீனம் ஏற்படும்.
  • இதய நோய்க்கான அபாயம்: மெக்னீசியம் குறைபாடு நீண்ட நாட்களுக்கு நீடித்தால், அது இதய நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என WHO எச்சரிக்கிறது.
  • அமிலத்தன்மை (Acidity): சுத்தமான நீரின் pH அளவு 7 (Neutral) ஆக இருக்க வேண்டும். ஆனால் RO தண்ணீரின் pH அளவு பொதுவாக 6-க்கு கீழ் குறைந்து, அமிலத்தன்மையாக (Acidic) மாறிவிடுகிறது. இது அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகளை உண்டாக்கும்.

இதையும் படிங்க : உங்க கேஸ் ஸ்டவ் ஆரஞ்சு நிறத்துல எரியுதா? அப்படீன்னா உயிருக்கே ஆபத்து! உடனே இத செய்யுங்க!

44
அப்போ RO வாட்டர் குடிக்கவே கூடாதா? தீர்வு என்ன?
Image Credit : Chatgpt

அப்போ RO வாட்டர் குடிக்கவே கூடாதா? தீர்வு என்ன?

"அப்போ போர் தண்ணீரையும், கிணற்று தண்ணீரையும் அப்படியே குடிக்கலாமா?" என்று கேட்டால், அது அதைவிட ஆபத்து. இன்றைய காலகட்டத்தில் நிலத்தடி நீரில் ரசாயனக் கழிவுகளும், உப்பும் அதிகமாக உள்ளன.

நாம் செய்ய வேண்டிய ஸ்மார்ட்டான தீர்வுகள் இதோ:

  • TDS அளவை சரிபார்க்கவும்: உங்கள் வீட்டு தண்ணீரின் TDS (Total Dissolved Solids) அளவு 300 முதல் 500-க்கு கீழ் இருந்தால், உங்களுக்கு RO தேவையே இல்லை! ஒரு சாதாரண UV + UF பில்டரே போதுமானது. TDS 500-க்கு மேல் இருந்தால் மட்டுமே RO தேவை.
  • TDS Controller / Mineral Cartridge: உங்கள் RO மிஷினில் 'TDS Controller' அல்லது 'Mineral Modulator' இருக்கிறதா என்று பாருங்கள். இது வடிகட்டிய தண்ணீரில் மீண்டும் தேவையான தாதுக்களை சேர்க்கும் தொழில்நுட்பம் ஆகும்.
  • மண்பாண்ட முறை (Traditional Touch): RO தண்ணீரை அப்படியே குடிக்காமல், ஒரு மண் பானையிலோ அல்லது செம்பு (Copper) பாத்திரத்திலோ ஊற்றி வைத்து சில மணி நேரம் கழித்து குடியுங்கள். மண்பானை தண்ணீரின் அமிலத்தன்மையை மாற்றி, காரத்தன்மையாக (Alkaline) மாற்றும்; இழந்த தாதுக்களையும் ஓரளவிற்கு மீட்டுத்தரும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். தொழில்நுட்பம் நம்மை நோய்களில் இருந்து காப்பாற்ற வேண்டுமே தவிர, அதுவே ஒரு நோயாக மாறிவிடக் கூடாது.

கிருமிகள் இல்லாத சுத்தமான தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான தண்ணீரும் முக்கியம். எனவே, உங்கள் வீட்டு தண்ணீரின் தரத்தை பரிசோதித்து, சரியான சுத்திகரிப்பு முறையை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்!

இதையும் படிங்க : Fridge Blast : குளிர்சாதனப் பெட்டி வெடிப்பதற்கான 7 காரணங்கள்! தடுப்பது எப்படி?

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
சுகாதார நன்மைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Railway Track : இது இல்லேன்னா ரயிலே கவுந்துடுமாம்! அறிவியல் சொல்லும் 5 காரணங்கள்!
Recommended image2
Bluetooth-க்கு அந்த பெயர் எப்படி வந்தது? அடடே இதுதான் காரணமா?
Recommended image3
Nothing Phone 4b: ஒரே கேமரா, சூப்பர் டிசைன்! பட்ஜெட் விலையில் ஐபோனுக்கு போட்டியா?
Related Stories
Recommended image1
உங்க கேஸ் ஸ்டவ் ஆரஞ்சு நிறத்துல எரியுதா? அப்படீன்னா உயிருக்கே ஆபத்து! உடனே இத செய்யுங்க!
Recommended image2
Fridge Blast : குளிர்சாதனப் பெட்டி வெடிப்பதற்கான 7 காரணங்கள்! தடுப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved