- Home
- உடல்நலம்
- Bitter Gourd Side Effects : பாகற்காய் கசப்பு நல்லதுனு நினைப்பீங்க!ஆனா இந்த 3 பிரச்சனை இருந்தா கண்டிப்பா தவிர்க்கனும்
Bitter Gourd Side Effects : பாகற்காய் கசப்பு நல்லதுனு நினைப்பீங்க!ஆனா இந்த 3 பிரச்சனை இருந்தா கண்டிப்பா தவிர்க்கனும்
Bitter Gourd Side Effects : பாகற்காய் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கினாலும் ஒரு சில உடல்நல பிரச்சினை உள்ளவர்கள் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் யார் யார் என்று இங்கு பார்க்கலாம்.

Bitter Gourd Side Effects
பாகற்காய் என்ற பெயரைக் கேட்டாலே நம்மில் பலருக்கும் முகம் சுழியும். காரணம் அதன் சுவை மிகவும் கசப்பாக இருப்பதால் தான் நாம் யாரும் அதை விரும்புவதில்லை. மிகச்சிலரே பாகற்காய் சாப்பிடுகிறார்கள். மத்தப்படி பெரிதாக யாருக்கும் பிடிப்பதில்லை. பாகற்காயை அதன் கசப்பான சுவையால் புறக்கணித்துவிடுகிறோம். ஆனால் அது ரொம்பவே சத்தான காய்கறியாகும். பாகற்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
ஆம், சில உடல்நல பிரச்சினை உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இந்த பதிவில் யாரெல்லாம் பாகற்காய் சாப்பிடக்கூடாது என்று தெரிந்துகொள்ளலாம்.
1. டைப்-1 நீரிழிவு நோயாளிகள்
உங்களுக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருந்தால் (Type 1 Diabetes) பாகற்காய் சாப்பிடவோ அல்லது அதன் சாற்றை குடிக்கவோ கூடாது. ஏனெனில் பாகற்காய் திடீரென இரத்த சர்க்கரை அளவை குறைத்துவிடும். உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைந்துவிட்டால், உடல் பலவீனமாகிவிடும். சிலருக்கு இதனால் மயக்கம் கூட வரும்.
2. சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள்
பாகற்காயில் ஆக்சலேட் அதிகமாகவே இருக்கிறது. எனவே, பாகற்காயை அதிகமாக சாப்பிடால் சிறுநீரக கற்கள் (Kidney Stones) பிரச்சனை ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, இது சிறுநீரகங்களில் நச்சுத்தன்மை அதிகரிக்கச் செய்யும். ஆகையால் ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பாகற்காய் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணிப் பெண்களும் பாகற்காய் சாப்பிட வேண்டாம். ஏனெனில் இது கருப்பையை பாதிப்பது மட்டுமல்லாமல், வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பாகற்காயின் கசப்பை குறைப்பது எப்படி?
பாகற்காயில் இருக்கும் கசப்புத்தன்மை குறைக்க, அதை சரியாக சமைக்க வேண்டும். இதற்கு முதலில், பாகற்காயை நன்றாக கழுவி அதன் விதைகளை அகற்றிவிடுங்கள். ஏனெனில் அதன் விதைகள் தான் ரொம்பவே கசப்பாக இருக்கும். அதுபோல பாகற்காய் கறி செய்யும்போது அதில் வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்தினால் பாகற்காயின் கசப்பு சுவை குறையும்.