Pregnant Women: கர்ப்பிணிப் பெண்கள் வைட்டமின் டி குறைப்பாட்டை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?
இயல்பாகவே கர்ப்பிணிப் பெண்களிடையே வைட்டமின் டி குறைபாடு காணப்படுகிறது. குறைபாட்டின் அளவு ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இது பல்வேறு சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. அவை என்னென்ன பாதிப்புகள் என்பதை இப்போது காண்போம்.
கர்ப்ப காலங்களில் பெண்களின் உடல் பலவிதமான ஹார்மோன் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும், இது அவர்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. ஆகவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான மற்றும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் டி. கருவில் இருக்கும் சிசுவின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமானது. இது கர்ப்ப காலத்தில் தாயின் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவி புரிகிறது. இருப்பினும் இயல்பாகவே கர்ப்பிணிப் பெண்களிடையே வைட்டமின் டி குறைபாடு காணப்படுகிறது. குறைபாட்டின் அளவு ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இது பல்வேறு சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. அவை என்னென்ன பாதிப்புகள் என்பதை இப்போது காண்போம்.
vitamin d deficiency
ப்ரீ எக்லாம்ப்சியா
கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாடு, உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இது ப்ரீ-எக்லாம்ப்சியாவின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
கர்ப்பகால நீரிழிவு
வைட்டமின் டி குறைபாடு உள்ள கர்ப்பிணிகளுக்கு, நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகமாக உள்ளது.
குறைப் பிரசவம்
வைட்டமின் டி குறைபாட்டினால், கர்ப்ப காலத்தில் குறைப் பிரசவத்திற்கு வழிவகுக்கும். இதனால் பிறந்த குழந்தைக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்.
குறைந்த பிறப்பு எடை
கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாடு இருப்பது, பிறந்த குழந்தைகளின் எடை குறைவதற்கும் வழிவகுக்கிறது. இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.
Herbals: நம் கண்முன்னே இருக்கும் அரிய மூலிகைகளின் அளப்பரிய பயன்கள் இதோ!
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்
சோர்வு, தசை பலவீனம், பலவீனம், எலும்பு வலி, மூட்டு வலி மற்றும் மனநிலையில் மாற்றம் போன்றவை கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாட்டிற்கான அறிகுறிகள் ஆகும்.
வைட்டமின் டி குறைபாட்டை தடுக்கும் வழிகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள், போதுமான அளவு சூரிய ஒளியைப் பெற வேண்டும். சூரிய ஒளிக்கு உடலை வெளிப்படுத்துவதே, வைட்டமின் டி-யைப் பெறுவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
வைட்டமின் டி அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதாவது கொழுப்பு மீன், முட்டையின் மஞ்சள் கரு, பால் மற்றும் தானியங்கள் போன்ற வலுவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை, தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு சூரிய ஒளி அல்லது உணவில் இருந்து தேவையான அளவு வைட்டமின் டி கிடைக்கவில்லை எனில், அவர்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸை உட்கொள்ளலாம்.