Herbals: நம் கண்முன்னே இருக்கும் அரிய மூலிகைகளின் அளப்பரிய பயன்கள் இதோ!
நம் கண்முன்னே இருந்தாலும் அதை நாம் கண்டுகொள்ளத் தவறி விடுகிறோம். அவ்வாறான பல நல்ல விஷயங்களில் மூலிகைகளும் ஒன்று. ஆம், பல அரிய வியாதிகளை குணப்படுத்தும் பல மூலிகைகள் நம்மைச் சுற்றியே உள்ளது.
நமக்கு உண்டாகும் சிறுசிறு உடல்நலக் கோளாறுகளுக்கு கூட மருத்துவமனைகளை நாடிச் செல்லாமல், நமக்கு அருகிலுள்ள மூலிகைகளை பயன்படுத்தி குணப்படுத்திக் கொள்ள முடியும். சில சமயங்களில் பல நல்ல விஷயங்கள், நம் கண்முன்னே இருந்தாலும் அதை நாம் கண்டுகொள்ளத் தவறி விடுகிறோம். அவ்வாறான பல நல்ல விஷயங்களில் மூலிகைகளும் ஒன்று. ஆம், பல அரிய வியாதிகளை குணப்படுத்தும் பல மூலிகைகள் நம்மைச் சுற்றியே உள்ளது.
மூலிகைகள்
மூலிகைகள் என்பது பல அரிய நன்மைகளை நமக்கு கொடுக்க வல்லது. இருப்பினும், அதற்கான முக்கியத்துவத்தை இங்கு யாரும் கொடுப்பதில்லை. பலரும் மூலிகைகளை அலட்சியப்படுத்தி விடுகின்றனர். சிறுசிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆங்கில மருத்துவத்தை நாடிச் செல்கின்றோம். ஆனால், நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களே நமக்கு உண்டாகும் சின்னச் சின்ன நோய்களை குணமாக்கும் திறனைப் பெற்றுள்ளன. அப்படியான சில மூலிகைகள் பற்றி இங்கு பார்ப்போம்.
பாகற்காய்
எளிதாக கிடைக்க கூடிய பாகற்காய், நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் இதற்கு இணை வேறொன்றும் இல்லை. பாகற்காய் சாறு குடிப்பது மிகவும் நன்மை அளிக்கும். மேலும், குடல்வாழ் புழுக்களையும் இது அழிக்கிறது.
செம்பருத்திப் பூ
வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் மற்றும் வயற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூவை கஷாயம் செய்து குடித்தால் மிகவும் நல்லது. மேலும், இதயம் தொடர்பான நோய்களுக்கு சிறந்ததொரு மூலிகையாக இது செயல்படுகிறது.
நிலவேம்பு
தீராத காய்ச்சலும் நிலவேம்பு கஷாயம் குடித்தால் தீர்ந்து விடும். இதன் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு, சிறிதளவு மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக் கடிகள் இறங்கி விடும்.
ஆடாதோடை
இருமலுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக ஆடாதோடை உள்ளது. இதன் இலைகளை பொடி செய்து, பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறைந்து விடும்.
Lice Infestation: பேன் தொல்லையால் அவதியா? இதோ ஒருசில எளிய டிப்ஸ்!
பொன்னாங்கண்ணி கீரை
பொதுவாக கீரை வகைகள் நமக்கு பல நன்மைகளை அள்ளித் தரும். அவ்வகையில், பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும். தினந்தோறும் ஏதேனும் ஒரு கீரை வகையை உணவில் சேர்த்துக் கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
கற்பூரவள்ளி
கற்பூரவள்ளியின் தண்டு மற்றும் இலைச் சாற்றை குடித்தால் தொண்டை ரயில் வளரும் சதை வளர்ச்சி விரைவிலேயே குணமாகும். மேலும், சளிப் பிரச்சனைக்கு சிறந்த மூலிகையாக இது செயல்படுகிறது.
துளசி
துளசி இலைகளை நன்றாக மென்று விழுங்கினால், பசி அதிகரிப்பதோடு செரிமான சக்தியும் அதிகரிக்கும். துளசி இலையின் சாறு சளியை குணமடையச் செய்யும்.