- Home
- உடல்நலம்
- Dehydration Symptoms : உடம்புல தண்ணீர்ச்சத்து இல்லன்னா என்னாகும்? சாதாரணமாக தோன்றும் மோசமான அறிகுறிகள்
Dehydration Symptoms : உடம்புல தண்ணீர்ச்சத்து இல்லன்னா என்னாகும்? சாதாரணமாக தோன்றும் மோசமான அறிகுறிகள்
உங்களது உடலில் நீர்ச்சத்து இல்லையென்றால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் உடல்நல பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Signs of Dehydration
பொதுவாக நம்முடைய உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லையென்றால், உடலில் இருக்கும் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். இதுதவிர, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதில் இடையூறு ஏற்படும். இதன் விளைவாக உடலானது ஆற்றலை இழந்து, உடல் சோர்வை ஏற்படுத்தும்.
அறிகுறிகள் :
நீங்கள் குறைவான அளவில் சிறுநீர் கழித்தாலோ அல்லது ஒவ்வொரு சில மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்காவிட்டாலும் உங்களது உடலில் போதிய அளவு தண்ணீர் சத்து இல்லை என்று அர்த்தம். இது தவிர சருமத்தில் வறட்சி, இதய துடிப்பில் மாற்றம் அதிகப்படியான உடல் சருகு போன்ற அறிகுறிகளும் உடலில் நீர்ச்சத்து இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது.
உடல்நல பிரச்சனைகள் :
உங்களது உடலில் போதிய அளவு தண்ணீர் சத்து இல்லையென்றால் இரத்த அழுத்தம் குறைந்து விடும். இதனால் உங்களது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவும் குறைந்து விடும். இதன் விளைவாக தலைசுற்றல், மயக்கம் ஏற்படும்.
அதிகப்படியான தலைவலி :
உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் முதலில் தலைவலி தான் ஏற்படும். பிறகுதான் மயக்கம் வரை செல்லும்.
பிற பிரச்சினைகள் :
நாள்பட்ட நீர்ச்சத்து குறைபாடானது சிறுநீரகங்கள் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை தான் பாதிக்கும். இது தவிர தசைகளை மோசமடைய செய்யும்.
நினைவில் கொள் :
- உங்களது உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லையென்றால் இரத்த ஓட்டம் சீரற்ற நிலைக்கு சென்று, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் திடீரென ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக இதயத்துடிப்பு திடீரென அதிகரிக்கும் மற்றும் குறையும். இந்த உணர்வானது 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தால் மரணம் கூட ஏற்படலாம்.
- உடலில் போதிய அளவு நீர் இருந்தால் உடல் உறுப்புகள் அனைத்தும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீராக செயல்படும். எனவே உடலில் போதுமான அளவு நீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதற்காக வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் போதாது, நீச்சத்து நிறைந்த பழங்களையும் சாப்பிடுங்கள்.