பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒருவர் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்காது. இதனால் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். நீரிழிப்பு பிரச்சினை பொதுவாக பெரியவர்களுக்கு மட்டுமே வரும் என்று நாம் நினைப்போம். ஆனால் குழந்தைகளுக்கும் வரும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அது தான் உண்மை. எனவே பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு நீரிழிப்பு மிக விரைவாக ஏற்படும். குழந்தையின் உடலில் பெரியவர்களிட அதிக நீர் இருக்கும் ஆனாலும் நீர்ச்சத்துக் குறைந்தால் அவை வெவ்வேறு வழிகளில் அறிகுறிகளை காட்ட தொடங்கும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழப்புக்கான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டு உடனே சிகிச்சை அளிக்கவும். இந்த பதிவில் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் எந்த மாதிரியான அறிகுறிகள் அவர்களது உடலில் தோன்றும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு நீரிழிப்பு ஏற்பட காரணம் என்ன?
குழந்தைகளுக்கு நீரிழிப்பு ஏற்பட காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- காய்ச்சல்
- குறைந்த திரவம் உட்கொள்ளல் ஆகியவை ஆகும்.
இவற்றை உடனடியாக கவனிக்கப்படாவிட்டால் அது அவர்களது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை அல்லது குறைந்த இரத்த அழுத்தம் போன்ற கடுமையான பிரச்சனைகளை உருவாக்கும்.
குழந்தைகளுக்கு நீரிழிப்பின் அறிகுறிகள் :
1. சிறுநீர் குறைவாக கழித்தல் : உங்கள் குழந்தை எப்போதும் போல் அல்லாமல் மிகவும் குறைவாக சிறுநீர் கழித்தாலோ அல்லது சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது நீரிழிப்பின் அறிகுறியாகும்.
2. நாக்கு வறட்சியாகுதல் : உங்கள் குழந்தையின் நாக்கு வறண்டு இருந்தாலும் அல்லது உமிழ் நீர் குறைவாகவும் அல்லது இல்லாமல் இருந்தால் அது நீரிழிப்பின் அறிகுறி.
3. கண்ணீர் வராமல் அழுவது : உங்கள் குழந்தை அழும்போது கண்ணீர் வரவில்லை என்றால் அவர்களது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதை குறிக்கிறது.
4. அசாதாரணமான துக்கம் : குழந்தையின் உடலில் நீரிழிவு பிரச்சனை இருந்தால் அசாதாரணமாக தூங்கலாம். எழுப்ப கடினமாக இருக்கும் அல்லது எரிச்சலடையும்.
எப்போது மருத்துவரை சந்திக்கணும்?
- கண்களில் அடிக்கடி நீர் வடிதல் - சுவாசிப்பதில் வேகம் - சாப்பிடுவதில் சிரமம் போன்றவையாகும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உடனே குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதற்குரிய சிகிச்சையை எடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நீரிழிப்பு வருவதை தடுக்க :
- குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அல்லது ஃபார்முலா பால் கொடுப்பதன் மூலம் நீரிழிப்பு வருவதை தடுக்கலாம்.
- மேலும் குழந்தைக்கு தவறாமல் உணவளிக்கவும்.
- வெப்பமான காலநிலை அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கூடுதல் திரவங்கள் கொடுங்கள்.
- வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் வந்தால் உடனே மருந்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
- குழந்தைகள் அழும் போது கண்ணீர் வரவில்லையென்றாலோ அல்லது மயக்கம் வந்தோலோ உடனே சிகிச்சை எடுக்க வேண்டும்.
