எந்த நேரத்தில் வாக்கிங் சிறந்தது? தூங்கும் முன் வாக்கிங் போகலாமா?
தூங்கும் முன்பு 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது குறித்து முக்கிய தகவல்களை இங்கு காணலாம்.

Walking Benefits Before Go To Bed
நடைபயிற்சி என்பது எளிய பயிற்சிகளில் ஒன்றாகும். பெரும்பாலான மக்கள் காலையில் நடப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். எல்லோராலும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ள முடிவதில்லை. காலை நடக்க முடியாதவர்கள் மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். தினமும் மாலை 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்தப் பதிவில் இரவில் தூங்கும் முன்பாக 30 நிமிடங்கள் நடப்பது என்ன நன்மைகளை தருகிறது என்பதை காணலாம்.
நல்ல தூக்கம்
இரவு நேரத்தில் நடைபயிற்சி செய்வதன் முக்கியமான நன்மை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது தான். நல்ல தூக்கம் பல நோய்களில் இருந்து தற்கொள்ள உதவும். 2023 ஆம் ஆண்டில் கியூரஸ் வெளியிட்ட ஆய்வில் நடைபயிற்சி மாலை நேர தூக்கத்தை மேம்படுத்துவதாக உறுதி செய்துள்ளது. தினமும் தூங்குவதற்கு முன்பாக நடப்பது உங்களுடைய மனதை நிதானப்படுத்தி பதற்றத்தை குறைக்கிறது. மன அழுத்தத்தை குறைத்து இரவில் நல்ல தூக்கத்தை பெறுவதற்கு இரவு நேர நடைபயிற்சி உதவுகிறது.
வளர்சிதை மாற்றம்:
இரவில் தூங்கும்போது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். தினமும் 30 நிமிடங்கள் மாலை நேரத்தில் நடந்தால் உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. தூங்கும் போது உங்களுடைய உடல் கலோரிகளை எரிப்பதை குறித்து நீங்கள் அறிவீர்களா? தூங்கச் செல்வதற்கு முன்பாக நடப்பது உங்களுடைய எடை குறைப்புக்கு உதவுகிறது. 2022இல் நியூட்ரியண்ட்ஸ் செய்த ஆராய்ச்சியில் தீவிரமான உடற்பயிற்சிகள் அதிக கலோரிகளை எரிப்பது போலவே, மாலை நேர நடைபயிற்சி இரவு நேர பசியைக் கட்டுக்குள் கொண்டு வருகிறது.
மன ஆரோக்கியம்:
மாலை நேரத்தில் நடப்பது உங்களுடைய உடலை மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மனச்சோர்விற்கான அறிகுறிகளை குறைக்க நடைபயிற்சி உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உங்களுடைய எதிர்மறை எண்ணங்களை நீக்க இரவுநேர நடைபயிற்சி உதவுகிறது. தூங்கும் முன்பாக நடைபயிற்சி செய்வது உங்களுடைய எதிர்மறை எண்ணங்களை நீக்கி உங்களின் பதற்றத்தை குறித்து நேர்மறையாக மாற்றும்.
செரிமானம்:
சிலருக்கு இரவு உணவுக்கு பின் வயிறு உப்புசம் அல்லது அஜீரணம் இருக்கும். அவர்கள் இரவில் சிறிது நேரம் நடப்பது செரிமானத்தை மேம்படுத்தும் உணவுக்கு பின்னர் நடைபெற்று செய்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சாப்பிட்ட பின் குறுநடை போடுவது அமில ரிஃப்ளக்ஸ் அல்லது அஜீரணம் ஆகியவை குறைய உதவும் என அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வு கூறுகிறது.