- Home
- உடல்நலம்
- Rainy Season Health Tips : மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க! இதை கண்டிப்பா பாலோ பண்ணுங்க
Rainy Season Health Tips : மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க! இதை கண்டிப்பா பாலோ பண்ணுங்க
மழைக்காலத்தில் பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், ஆரோக்கியமாக இருக்க வாழ்க்கை முறையில் சிறிது மாற்றம் செய்தால் மட்டும் போதும்.

Rainy Season Health Tips
தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி, காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். ஆனால் இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், நம்முடைய வாழ்க்கை முறையில் சிறிது மாற்றங்கள் மட்டும் செய்தால் போதும். மழை காலத்திலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆவி பிடிப்பது :
வீசிங் பிரச்சனை புலவர்கள் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ரொம்பவே கம்மியாக இருப்பவர்கள் வேப்பிலை, நொச்சி மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு ஆவி பிடிக்கவும். மூலிகை செடிகளுக்கு பதிலாக தலைவலி தைலம் சேர்த்து கூட ஆவி பிடிக்கலாம்.
மூலிகை தேநீர் குடிக்கவும் :
மழைக்காலத்தில் தொற்று நோய்கள் ஏதும் வராமல் இருக்க மஞ்சள் மற்றும் மிளகு கலந்த பாலை தினமும் குடிக்க வேண்டும். இதில் இருக்கும் சக்தி வாய்ந்த பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதுதவிர சுக்கு, மிளகு போட்டு டீ குடிக்கலாம்.
தேன் :
மழைக்காலத்தில் நம் அனைவரையும் அதிகமாக பாதிக்கும் தொற்று எதுவென்றால், சளி தான். ஆம், மழையில் சிறிது நேரம் நனைத்தால் கூட உடனே சளிப்பிடித்து விடும். எனவே, இந்த சமயத்தில் தேன் சாப்பிடுவது நல்லது. தேனில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சளியை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
- மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது ரொம்பவே முக்கியம். எனவே இந்த சீசனில் அவர்களுக்கு குளிர்ச்சிக்கு இதமான ஆடைகளை அணிய வேண்டும்.
- குளிர்ந்த நீருக்கு பதிலாக சூடான நீரை குடிக்க கொடுக்க வேண்டும். அதுபோல எப்போதுமே சூடான உணவுகளை மட்டுமே கொடுக்கவும்.
- மழைக்காலங்களில் வீட்டை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும். அவை டெங்கு, மலேரியா போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும்.