மழைக்காலங்களில் மளிகை சாமான்கள் புதியதாகவும், பாதுகாக்கவும் வைத்திருக்க சிம்பிளான சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

மழைக்காலங்களில் வீட்டை மட்டும் பராமரித்தால் போதாது. மளிகை பொருட்களையும் பாதுகாப்பாக வைக்க சற்று கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் பூஞ்சைகள், வண்டுகள், பூச்சிகள் வந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில், மழைக்காலங்களில் வீட்டில் இருக்கும் மசராஜாமான்களை புதியதாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்பது பற்றி இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

1. மழைக்காலங்களில் மளிகை பொருட்களை காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாக்கள், கண்ணாடி பாட்டில் மற்றும் பேப்பர் பைகளில் சேமித்து வைத்தால் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்.

2. அதுபோல மளிகை பொருட்கள் இருக்கும் டப்பாக்களில் கிராம்பு, பிரியாணி இலை, வேப்பிலை ஆகியவற்றை போட்டு வைத்தால் புழுக்கள் பூச்சிகள் வருவது தடுக்கப்படும்.

3. பருப்பு உள்ளிட்ட மசாலா பொருட்களை உயரமான இடத்தில் ஈரப்பதம் வராதபடி வைக்க வேண்டும். வெயில் அடிக்கும் சமயத்தில் அவற்றை காய வைத்து சேமிக்கவும்.

4. சர்க்கரை வைத்திருக்கும் டப்பாவை பத்து நாட்களுக்கு ஒரு முறை வினிகர் மற்றும் தண்ணீர் கலவையை பயன்படுத்தி சுத்தம் செய்து காய வைத்து பிறகு பயன்படுத்தவும்.

5. வீட்டில் ஊறுகாய் தயாரித்து வைத்தால் அதை கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் சேமித்து நீண்ட நாட்கள் வரை பயன்படுத்தலாம். அதுபோல அதை எடுக்கும்போது உலர்ந்த கரண்டியை பயன்படுத்துங்கள். விரைவில் கெட்டுப் போகாது.

6. மழைக்காலங்களில் அரிசி, பருப்பு, மாவு, ரவை, தானியங்கள் போன்ற மளிகை சாமான்களை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வாங்கி பயன்படுத்தி வந்தால் அவற்றை பராமரிக்கும் டென்ஷன் உங்களுக்கு இருக்காது.

7. மழைக்காலங்களில் கீரைகள் மற்றும் காய்கறிகள் சீக்கிரமாகவே அழுகிவிடும். எனவே தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கி பயன்படுத்துங்கள்.

8. மழைக்காலங்களில் பிரிட்ஜில் அதிக பொருட்களை வாங்கி வைக்காதீர்கள் இடைவெளி விட்டு காற்றோட்டமாக காய்கறிகளை வைத்தால் சீக்கிரமாக கெட்டுப் போகாமல் இருக்கும். நீண்ட நாள் வரை பயன்படுத்தலாம்.

9. மழைக்காலங்களில் மசாலாக்களில் பூஞ்சை பிடிக்கும் அல்லது கட்டியாக மாறிவிடும். எனவே அவற்றை நீங்கள் ஒரு வானிலியில் வறுத்து நன்கு ஆரம்பித்து பிறகு கண்ணாடி டப்பாவில் போட்டு சேமித்து வைத்தால் கெடாமல் நீண்ட நாள் வரை ப்ரஷ் ஆக இருக்கும்.

10. அதுபோல கிச்சனில் குப்பைகளை அவ்வப்போது உடனே அப்புறப்படுத்தி விடுங்கள். பாத்திரங்களையும் சுத்தப்படுத்தி வைக்கவும். சமையல் அலமாரியை நன்கு சுத்தப்படுத்தி ஈரமில்லாமல் குளிர்ந்த நிலையில் வைத்துக் கொண்டால் மளிகை சாமான்கள் சீக்கிரமாக கெட்டுப் போகாது. அதன் ஆயுள் நீடிக்கும்.

11. காய்கறிகள் மற்றும் பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்து சேமிப்பதற்கு முன் முதலில் அவற்றை நன்கு கழுவி காய வைத்து பிறகு ஒரு பேப்பரில் சுற்றி வைக்கவும். அது போல அதிக பழுத்த பழங்களை பிற பழங்களுடன் சேமித்து வைக்க கூடாது. இல்லையெனில் மற்றவையும் கெட்டுப் போய்விடும்.

மழைக்காலங்களில் மேலே சொல்லப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி மளிகை சாமான்கள் சேமித்தால் அவை கெட்டுப்போகாது. உங்கள் பணமும் வீணாகாது.