Kitchen Tips : கொத்தமல்லி விதையை 'இப்படி' ஸ்டோர் பண்ணுங்க! இல்லன்னா வண்டு வரும்
கொத்தமல்லி விதைகளில் வண்டு வராமல் இருக்க அதை எப்படி ஸ்டோர் செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

Coriander Seed Storage Tips
கொத்தமல்லி விதைகள் சமையலறையில் பயன்படுத்தும் மசாலா பொருட்களில் ஒன்றாகும். இது மற்ற மசாலா பொருட்களை போலல்லாமல் சீக்கிரமாகவே கெட்டுப் போய்விடும். மேலும் கொத்தமல்லி விதைகளில் வண்டுகள் வேகமாக வந்துவிடும். அதுபோல மழைக்காலத்தில் கொத்தமல்லி விதைகள் கருப்பாக மாறிவிடுவது மட்டுமல்லாமல், வானிலையின் இருப்பதன் காரணமாக பூஞ்சைகளும் வந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில், கொத்தமல்லி விதைகளை எப்படி சேமித்தால் வண்டுகள் வருவதை தடுத்து, நீண்ட நாள் சேமிக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நமத்து போவதை தடுக்க..
கொத்தமல்லி விதைகள் ரொம்பவே லேசாக இருப்பதால் அது சீக்கிரமாகவே ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும். இதனால் சீக்கிரமாகவே நமத்தும் போய்விடும். இப்படி இருக்கையில் கொத்தமல்லி விதைகள் நமுத்து போகாமல் இருக்க அதை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து பிறகு ஆற வைத்து காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைக்க வேண்டும். கொத்தமல்லி விதைகளை மொத்தமாக ஒரே டப்பாவில் சேமிக்காமல், தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
அதுபோல ஜிப் லாக் கவரிலும் கொத்தமல்லி விதைகளை சேமித்தால் கெட்டுப் போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்.
கொத்தமல்லி விதைகளில் பூச்சிகள் வண்டுகள் வருவதை தடுக்க..
கொத்தமல்லி விதைகளில் பூச்சிகள் மற்றும் வண்டுகள் வருவதை தடுக்க அதை சேமித்து வைத்திருக்கும் டப்பாவில் சுமார் 4-5 ஏலக்காய் போட்டு வைக்கவும். ஏலக்காயின் வாசனை வண்டு பூச்சிகளுக்கு பிடிக்காது.
அதுபோல ஒரு சின்ன வெள்ளைத் துணியில் சிறிதளவு வேப்பிலை, கிராம்பு மிளகு, காய்ந்த மிளகாய், அரிசி ஆகியவற்றை சேர்த்து மூட்டையாக கட்டி கொத்தமல்லி சேமித்து வைக்கும் டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் பூச்சிகள் வரவே வராது.
சிலிக்கான் பாக்கெட்..
பொதுவாக இது புதுசாக வாங்கும் டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில், சூட்கேஸ், ஸ்கூல் பேக் போன்றவற்றில் இருக்கும். ஆனால் இது விஷமென்று எண்ணி நாம் குப்பையில் போட்டு விடுவோம். ஆனால் உண்மையில், இது து ஈரத்தை ஒரிஜின் தன்மையை கொண்டுள்ளன. ஆகவே கொத்தமல்லி விதைகள் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க இது உதவுகிறது.
வெயிலில் காய வைக்கலாம்..
நீங்கள் மொத்தமாக கொத்தமல்லி விதைகளை வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை அவ்வப்போது வெயிலில் காய வைத்து பயன்படுத்துங்கள். இப்படி செய்தால் தான் கொத்தமல்லி விதைகள் கெட்டுப் போகாமல் நீண்ட பயன்படுத்த முடியும்.