வியர்க்குருவை நீக்கும் சூப்பர் டிப்ஸ்.. வலியில்லாமல் நிவாரணம்
கோடைகாலத்தில் வரும் வியர்க்குருவால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதை குணப்படுத்துவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Tips For Heat Rash : கோடை காலம் வந்தாலே பல தோல் தொடர்பான பிரச்சனைகள் வரும். அவற்றில் ஒன்றுதான் வியர்க்குரு. இது சருமத்தின் மேற்புறத்தில் சிறிய வடிவில் கொப்பளம் போல் இருக்கும். இதனால் ஏற்படும் அரிப்பை தாங்கிக்கொள்ளவே முடியாது. வியர்க்குருவை சொறியும்போது அதனால் எரிச்சல் மற்றும் வலி தான் ஏற்படும்.
வியர்க்குரு வர காரணங்கள்:
சுட்டெரிக்கும் வெயிலில் அதிக நேரம் இருப்பது, அதிக வியர்வை வெளியேறும் விதமாக வேலை செய்வது, இறுக்குமான ஆடைகளை உடுத்துவது, காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் இருப்பது போன்றவை தான் வியர்க்குரு வருவதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் வியர்க்குருவால் அவதிப்படுவார்கள். எனவே இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க அதிகளவு தண்ணீர் குடிப்பது மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இதையும் படிங்க: வெயில் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்கனும்? இதய நோயாளிகளே இதை கவனிங்க
வியர்க்குரு பிரச்சினை உள்ளவர்கள் என்ன பழம் சாப்பிடலாம்?
வியர்க்குருவால் அவதிப்படுபவர்கள் தர்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம் போன்ற நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் இளநீரும் குடிக்கலாம். முக்கியமாக வியர்க்குரு உள்ளவர்களுக்கு பனை நுங்கு அருமருந்தாகும்.
இதையும் படிங்க: கோடையில் கவனம்!! வெயில் காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் தெரியுமா?
வியர்க்குருவை குணப்படுத்த சிம்பிள் டிப்ஸ்:
குளிர்ந்த குளியல் : வியர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு தணியும்.
மஞ்சள் சந்தனம் மற்றும் வேப்பிலை : மஞ்சள் சந்தனம் மற்றும் வேப்பிலை இவை மூன்றையும் சம அளவு எடுத்து பேஸ்ட் போலாக்கி அதை வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி குளிக்கவும்.
கற்றாழை : கற்றாழையில் இருக்கும் ஜெல்லை எடுத்து சோப்பு போல் தேய்த்து குளித்து வந்தால் வியர்க்குரு பிரச்சனை நீங்கும்.
வெட்டிவேர் பொடி : வெட்டிவேர் பொடியை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வந்தாலும் வியர்க்குரு குணமாகும்.
பருத்தி ஆடைகள் : வியர்க்குரு பிரச்சனை உள்ளவர்கள் கடுமையான வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வியர்வை அதிகம் வராமல் இருக்க பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.