நேரமில்லைனு சொல்லாதீங்க! வெறும் 3 நிமிஷத்துல குளிர்கால மூட்டு வலியை குறைக்கும் யோகா!
yoga poses for knee pain: யோகாசனங்கள் மன அமைதியை தருவது மட்டுமில்லை, குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு வலிகளையும் குறைக்கிறது.
நம் ஒவ்வொருவரின் வயதுக்கும் ஏற்ற மாதிரி மூட்டு வலி வருவதற்கான வாய்ப்புகள் வேறுபடும். வலுவிழந்த எலும்புகள், போதிய உடல் உழைப்பு இல்லாமை, ஊட்டச்சத்துகள் கிடைக்காதது வலியை அதிகப்படுத்தும். சில மருந்துகள் இந்த வலியை குறைக்க உதவினாலும் மீண்டும் வலிக்க வாய்ப்புள்ளது.
மூட்டு வலி உண்டாகும் போது நடக்கவும், உட்காரவும், படுக்கவும் கூட நாம் சிரமப்படுவோம். இது நம்முடைய அன்றாட வேலைகளை கூட சிரமமாக்கும். இதனை சரி செய்ய மூன்று ஆசனங்களை செய்தால் வலி குறையும்.
virabhadrasana
வீரபத்ராசனம்
இதனை செய்வதால் கைகள், தோள்கள், தொடைகள், முதுகு தசைகள், கீழ் முதுகு பலப்படுத்தப்படுகிறது. இடுப்பை சுற்றியுள்ள தேவையில்லாத கொழுப்பு குறையும். உடலில் சமநிலையை மேம்படுத்துகிறது. அதிக ஆற்றல் கிடைக்கிறது. இதனை செய்வதால் கவனக் குவிப்பு, தைரியம், இரக்கம், அமைதி ஆகிய பண்புகள் அதிகரிக்கும். வலி வராமல் இருக்க இந்த ஆசனம் தினமும் செய்யலாம். ஆனால் வலியுடன் செய்யக் கூடாது.
சேது பந்தாசனம்
இந்த ஆசனம் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது. மனதை அமைதிப்படுத்துகிறது. பதற்றம், மன அழுத்தத்தையும் குறைக்கிறது. முதுகு தசையை வலுப்படுத்தும். முதுகு வலியில் உடனடி நிவாரணம் கிடைக்கும். மார்பு, கழுத்து, முதுகெலும்புக்கு ஒரு நல்ல மசாஜ் மாதிரி இருக்கும். மாதவிடாய் வலியின் அறிகுறிகளை சரி செய்யும். ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ், சைனசிடிஸ் ஆகிய பிரச்சனை உடனே குறைக்கும்.
இதையும் படிங்க; இறுக்கமான உள்ளாடை அணியும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகுமா? விந்தணு பாதிப்பு அபாயம்!
தனுராசனம்
இதனை செய்வதால் தோள்பட்டை வலி குறையும். முதுகுவலியை அறவே நீக்கும். மன அழுத்தம், சோர்வை நீக்கும். முதுகு, வயிற்று தசைகளை வலுப்படுத்தும். உடலுறவில் ஈடுபடும் இனப்பெருக்க உறுப்புகளை தூண்டுகிறது. மார்பு, கழுத்து, தோள்பட்டை தசைகளை உறுதியாக்கும். அசௌகரியம், மலச்சிக்கல், சிறுநீரக ஆகிய பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
இந்த ஆசனங்களை செய்ய வெறும் மூன்று நிமிடங்களே ஆகும், சிரமம் பார்க்காமல் தினமும் இதனை செய்து வந்தால் நீண்ட நாள் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம். அதுவும் குளிர்கால மூட்டுவலி பறந்து போகும்.
இதையும் படிங்க; கன்னித்தன்மையை இழந்த பெண்களுக்கும் முதலிரவில் ரத்தம் வரும்! இந்த மாத்திரையை பத்தி தெரியுமா?