இறுக்கமான உள்ளாடை அணியும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகுமா? விந்தணு பாதிப்பு அபாயம்!
Tight underwear affect sperm count: ஆண்களுக்கு இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் விந்தணு உற்பத்தியில் மோசமான பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது.
இன்றைய காலத்தில் அநேக ஆண்கள் அவசரகதியான வாழ்க்கைக்கு பழகிவிட்டனர். கையில் கிடைத்த உணவுகளை சாப்பிட்டு, ஆரோக்கியத்தை மறந்த ஆண்கள் பலுகி பெருகிவிட்டனர். குடும்ப சூழல், அதிக பொறுப்புகளால் தங்களை கவனிக்க நேரமில்லாமல் ஆண்கள் ஓடுகின்றனர். இப்படி உடல் நலத்தில் அக்கறை கொள்ளாத காரணத்தால் பல ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிலருக்கு அது இருப்பதே தெரிவதில்லை.
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, ஆண்மை குறைபாடு ஏற்பட காரணமாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு குறைபாடு, புகைப்பிடிக்கும் பழக்கம், ஆரோக்கியமில்லாத உணவுகள், இறுக்கமான உள்ளாடைகள் என பல காரணிகள் காரணமாக உள்ளன. உடலுறவில் விரக்தி, விரைவில் விந்து முந்துதல், விறைப்புத்தன்மையில் கோளாறு, விதைப்பையில் வீக்கம் போன்ற அறிகுறிகளால் விந்தணுக்கள் குறைபாடு பிரச்சனையை அடையாளம் காணலாம்.
இதையும் படிங்க; எப்பவும் சோர்வா இருக்கா? புரதச்சத்து குறைபாடா இருக்கலாம்.. இந்த உணவுகளை சாப்பிடுங்க தெம்பா ஆகிடுவிங்க!
ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியில் பாதிப்பு, உயிரணுக்கள் பலவீனமாக இருப்பதற்கு இறுக்கமான உள்ளாடைகள் காரணமாக உள்ளதா என்பதை குறித்து இங்கு காணலாம். ஆண்களின் விதைப்பையில் காணப்படும் செமினிபெரஸ் குழாய்களினால் தான் விந்தணு உற்பத்தியாகிறது. இந்த விதைப்பையின் வெப்பநிலை நம் உடல் வெப்பநிலையை விடவும் குறைவாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை அதிகமான வெப்பம் இருக்குமானாம் விதைப்பைகள் சேதமாகி விந்தணு உற்பத்தி பாதிக்கும்.
கோடைகாலங்களில் வெப்பநிலையை சமாளிக்க உடல் தன்னை தானே தகவமைத்து கொள்ளும். அதனால் தான் விதைப்பந்துகள் கீழே தொங்கிவிடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது கோடையில் நாய் வெப்பத்தை சமாளிக்க நாக்கை வெளியே தொங்கவிடுமே அப்படி ஆண்களுக்கு விதைப்பந்துகள் தொங்கும்.
குளிர்காலத்தில் சுருங்கி உடலோடு அணுக்கமாக இருக்கும். இந்த மாதிரி நேரத்தில் இறுக்கமான உள்ளாடைகளை அணியும்போது விதைப்பந்துகள் மீது அழுத்தம் அதிகரிக்கும். இறுக்கமான உள்ளாடைகள் வெப்பத்தை அதிகரிக்கும். இதன் காரணமாக விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு மலட்டுத்தன்மைக்கு வாய்ப்பு அமைந்துவிடுகிறது. இதனால் சிலருக்கு உள்ளுறுப்பில் தொற்று ஏற்படும். இதற்கு தீர்வு காண தளர்வான ஆடைகளை அணிவது அவசியம்.
உடல் ஆரோக்கியத்தில் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியம் மிக முக்கியமானது. மற்ற உறுப்புகளை விட அவை அதிக உணர்ச்சி கொண்டவை. அதனால் வீட்டில் இருக்கும்போது தளர்வான வேட்டி, லுங்கி மாதிரியான ஆடைகளை அணியுங்கள். வெளியில் செல்லும்போது தளர்வான, பருத்தி உள்ளாடையை அணியுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.
இதையும் படிங்க; உடலுறவு வேண்டாம்னு விலகினால் இவ்வளவு பிரச்சனையா?