MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • கன்னித்தன்மையை இழந்த பெண்களுக்கும் முதலிரவில் ரத்தம் வரும்! இந்த மாத்திரையை பத்தி தெரியுமா?

கன்னித்தன்மையை இழந்த பெண்களுக்கும் முதலிரவில் ரத்தம் வரும்! இந்த மாத்திரையை பத்தி தெரியுமா?

Fake Blood Capsule: நிறைய ஆண்கள் தங்கள் மனைவி கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதாவது தான், திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் அந்தரங்க வாழ்வில் முதன்மையான இடம் தனக்கு வேண்டும் என விரும்புகிறார்கள்.   

2 Min read
Author : maria pani
| Updated : Jan 08 2023, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு வேறொரு காதல், தனக்கு முன்பு ஏதேனும் உடலுறவு ( Pre marital sex) இருந்திருப்பதையும் அவர்களால் ஏற்று கொள்ள முடிவதில்லை. முதலிரவில் தங்களுடைய மனைவிக்கு அந்தரங்க உறுப்பில் இருந்து இரத்தம் வராவிட்டால் அவர் கன்னித்தன்மை இல்லாதவர் என சில ஆண்கள் நினைத்து கொள்கின்றனர். 

 

 

 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

 கன்னித்தன்மை என்பது முதல் தடவை உறவு வைத்து கொள்ளும்போது பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் வருவது என பலர் கருதுவதால் வரும் சிக்கல் இது. மருத்துவரீதியாக இந்த விஷயத்தை அணுகும்போது, எல்லா பெண்களுக்கும் இவ்வாறு நடப்பது இல்லை என தெரிய வருகிறது. விளையாட்டு வீராங்கனைகள், ஜிம்னாஸ்டிக்ஸ் செய்பவர்கள், சைக்கிள் ஓட்டும் பெண்கள், அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு பெண்ணுறுப்பில் மாற்றம் ஏற்படக்கூடும். இது போன்ற பாலியல் அல்லாத நிகழ்வுகளால் கூட பெண்களுக்கு முதல் உறவு வைத்து கொள்ளும் போது ரத்தம் வருவதில்லை என்கிறது மருத்துவம்.

36

கன்னித்தன்மை இங்கு பொதுவாக வைக்கப்படவில்லை. பெண்களுக்கு மட்டும்தான் இந்த ஒழுக்கரீதியான வட்டம் வரையப்படுகிறது. இந்த ஒழுக்கரீதியான கோட்பாடுகள், ஆண்களின் ஈகோ பிரச்சனையால் பல உறவுகளில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த சம்பவங்களுக்கு போலியான கன்னித்தன்மையை வரவழைக்கும் மாத்திரையை சிலர் தீர்வாக கருதுகின்றனர். உடலுறவின் போது இந்த மாத்திரையை பெண்ணுறுப்பில் வைக்கும்போது அது வெடித்து போலி ரத்தத்தை வெளியேற்றும். இது அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறார் என்ற போலியான பிம்பத்தை அளிக்கும். 

இதையும் படிங்க; எப்பவும் சோர்வா இருக்கா? புரதச்சத்து குறைபாடா இருக்கலாம்.. இந்த உணவுகளை சாப்பிடுங்க தெம்பா ஆகிடுவிங்க!

46

ஒரு பெண்ணின் ஒழுக்கம் என்பது அவரது பெண்ணுறுப்பில் இல்லை. அந்த கன்னித்தன்மையை வைத்து எந்த பலனும் இல்லையென்றாலும் பிற்போக்கான சிந்தனையுடைய சிலரின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்ய இந்த மாத்திரை நிவாரணமாக இருக்கும். ஏற்கனவே கன்னித்தன்மையை இழந்தவர்களுக்கும் கூட இந்த மாத்திரை வரப்பிரசாதம் தான் என்கிறார்கள் சில இணையவாசிகள். இந்த மாத்திரை இணையதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. சுமார் 2,700 முதல் 3,600 ரூபாய் வரை இதனை பெறலாம். முதல் இரவுக்கான போலி ரத்தம் வெளியேற உயர்தரத்திலுள்ள ரத்தப் பொடி கலக்கப்பட்டுள்ளது. பயன்படுத்த எளிமையானது. பக்கவிளைவுகள் இல்லையெனவும் கூறப்படுகிறது. 

 

 

56

சிலர் இந்த மாத்திரை பெண்களின் ஒழுக்கத்தை நிறுவ கோட்பாடுகள் வரையறை செய்யும் ஆணாதிக்கத்திற்கு சவுக்கடி என்கின்றனர். ஆனால் இந்த மாத்திரைகளை பயன்படுத்துவது மீண்டும் அந்த ஆணாக்கத்திற்கு துணை போகும் செயல்தான். ஒரு ஆணின் ஈகோ கஷ்டபடாமல் பார்த்து கொள்ள தான் இந்த வழிமுறை. கன்னித்தன்மையை எந்த ஆணும் நிரூபணம் செய்யாத போது பெண் ஏன் நிரூபிக்க வேண்டும். 

66

எந்த உறவும் ஒரே நாளில் கட்டியெழுப்ப கூடியது அல்ல. சில உறவுகள் தோற்ற பிறகு தான் ஒரு நல்ல உறவை கண்டடைய முடிகிறது. உங்களுக்கு முன்பாக உங்கள் வாழ்க்கைத் துணைக்கு இன்னொரு காதல் இருந்தால் அதை குற்றப்படுத்த வேண்டிய தேவையில்லை. உங்களுக்கு அவர் நேர்மையானவராக இருக்கிறாரா என்பதே முக்கியம். மாத்திரையால் அல்ல மனங்களால் இணையுங்கள். போலியான பிம்பங்களால் உறவை ஆரம்பிக்காதீர்கள். 

இதையும்; இறுக்கமான உள்ளாடை அணியும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகுமா? விந்தணு பாதிப்பு அபாயம்!

About the Author

MP
maria pani
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(65.3 ov) 99 & 195/4
Day 5 - Session 1
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(20.0 ov)225/4
INDIND
(15.5 ov)178/5
IND 48 runs in 25 balls
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Food For Children: சுவையான நெல்லிக்காய் சாதம் செய்யலாம்.! ஒரே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்கூல் லஞ்ச்.!
Recommended image2
Instant Acidity Relief: சாப்பிட்டதும் நெஞ்சில் எரிகிறதா? அசிடிட்டியை விரட்டும் 5 நிமிட வீட்டு வைத்தியம்!
Recommended image3
AI Cancer Prediction: ஒரு செல்ஃபி போதும்... கேன்சர் நோயாளி எவ்வளவு நாள் வாழ்வார்னு AI சொல்லிடும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved