நோய் நொடியில்லாமல் நீண்டநாள் வாழ இவைகளை தினமும் எடுத்துக்கொண்டாலே போதும்.டாக்டரிடம் செல்லும் சூழல் கம்மிஆகும்
அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லாமல் , நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ சில வீட்டு வைத்தியங்களை ஃபாலோ செய்தால் போதும். அப்படியான சில வீட்டு வைத்தியங்களை தான் இந்த பதிவில் காண உள்ளோம்
இன்றைய இயந்திர உலகத்தில் எப்பொழுதும் நாம் அனைவரும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கின்றோம். இதனால் நாம் ஏனோ தானோவென்று சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம். இப்படி சாப்பிடுவதால்ஏதோ ஒரு உடல் நல கோளாறு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்கிறோம். இப்படி செல்வதால் நாம் உழைத்து சம்பாதித்த பணமும் செலவு ஆகிறது.
இப்படி அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லாமல் , நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ சில வீட்டு வைத்தியங்களை ஃபாலோ செய்தால் போதும். அப்படியான சில வீட்டு வைத்தியங்களை தான் இந்த பதிவில் காண உள்ளோம்
உங்கள் வாழ்க்கையை நிறைவாக வாழ ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானது . உடற்பயிற்சி, ஆரோக்கியமான முறையான உணவுப் பழக்கம் , தூக்கம் உட்பட உள்ளிட்டவை இருந்தாலும், வீட்டு வைத்தியத்தையும் சேர்த்துக் கொண்டால் நமது ஆரோக்கியத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம்
Image: Getty Images
எலுமிச்சை :
தினமும் காலை வெதுவெதுப்பானதண்ணீரில் எலுமிச்சை சாறு வருகி வந்தால் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். செரிமானம் சரியாக இருப்பின் மலசிக்கல் பிரச்சனை இருக்காது. இரண்டும் சரியாக உள்ள போது பசி இயற்கையாகவே பசி தூண்டப்படுகிறது. அதோடு இதில் வைட்டமின் சியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பல்வேறு நோயினை எதிர்த்து போராடுகிறது. நம் உடலை ஹைட்ரேட்டாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
இஞ்சி:
இதில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு சக்தியும், ஆக்ஸிஜனேற்றி யாகவும் செயல்படுகிறது. இஞ்சி உடல் பாகங்களின் (உட்புறத்தில்) உண்டாகும் வீக்கத்தைக் குறைக்க உதுவுகிற்து. உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும், கீல்வாதம், மாதவிடாய் பிடிப்புகள் போன்ற வலிகளையும் குறைக்கிறது. தவிர அதிகமாக உணவுகளை எடுத்து கொள்வதால் வாந்தி, குமட்டல் போன்ற வயிறு உபாதைகளை சரி செய்ய இஞ்சி எடுத்துக் கொள்ளலாம்.
Image: Freepik
நட்ஸ்:
மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள தினமும் நட்ஸ் கடலை ,பாதாம், அக்ரூட் பருப்புகளை ஒரு கையளவு சாப்பிடுவதால் மூளையும் , சரி, இதயமும் சரி ஆரோக்கியமாக இயங்கும். விர உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.
மஞ்சள் :
மஞ்சள் 1 சிறப்பான ஆக்ஸிஜனேற்றி மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. இதனை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் எல்லையில்லா நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம். அதோடு உடலின் உட்புறத்தில் உண்டாகும் இன்ஃபிலமேசன் என்னும் வீக்கத்தைக் குறைக்கிறது. தவிர இது மூளையை சுறுசுறுப்பாக செயல்படுத்தவும் செய்கிறது. தினமும் மஞ்சள்,மிளகு மற்றும் பூண்டு சேர்த்த பால் சேர்த்து குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
மூச்சு பயிற்சி:
தினமும் குறைந்த பாதகமா 10 நிமிடங்கள் மூச்சு பயிற்சி செய்வதை வழக்கமாக்குங்கள்.இது நுரையீரல் சீராக இயங்க துணை புரிகிறது. அதோடு இந்த பயிச்சி செய்வதால் மன அழுத்தமும் , மனப் பதட்டமும் குறையும் .
சமீபத்தில் நடந்த மருத்துவ ஆய்வின்படி 5 நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியை செய்யும் பொழுது டிப்ரஷன் குறையும் என்று நிரூபணம் செய்துள்ளது. ஆரோக்கிய வாழ்விற்கு மன மகிழ்ச்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வீட்டில் இருக்கக்கூடிய இந்த பொருட்களை தினமும் நாம் சாப்பிடும் உணவுகளில் சேர்த்துக் கொள்வதால் ஏராளமான ஆரோக்கிய பலன்களை தருகிறது. இவைகளை பயன்படுத்துவதால் எந்த ஒரு விளைவும் ஏற்படாது என்பதால் இதனை எந்த ஒரு தயக்கமுமின்றி எடுத்துக் கொள்ளலாம்.