Health Tips : மறந்தும் கூட சாப்பிட்ட பின் இப்படி செய்யாதீங்க ... விளைவு பயங்கரம்..!!
சாப்பிட்ட பிறகு 100 படிகள் நடந்தால் செரிமானம் நன்றாக இருக்கும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்து. மேலும் உடலும் ஃபிட்டாக இருக்கும். ஆனால் சாப்பிட்ட பிறகு சில விஷயங்களைச் ஒருபோதும் செய்யவே கூடாது. அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
நடைப்பயிற்சி நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. நடைபயிற்சி பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. அதனால்தான் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். ஆனால் சாப்பிட்ட பின் நடப்பது நல்லதா? இல்லையா இதில் பலருக்கு பல சந்தேகங்கள் உள்ளன. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சாப்பிட்ட பிறகு குறைந்தது 100 படிகள் நடக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த நடைப்பயணம் நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சாப்பிட்ட பிறகு 100 படிகள் நடப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒவ்வொரு உணவிற்கும் பிறகு ஒரு சிறிய நடை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். உணவு உண்ட பிறகு 15 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இது ஒருபுறமிருக்க, சாப்பிட்ட பிறகு என்னென்ன செய்யக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
தண்ணீர் குடிக்கக் கூடாது
சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இது செரிமானத்தை மெதுவாக்கும். இது உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.
இதையும் படிங்க: நாம் மூன்று வேளையும் சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா?
தூங்கக் கூடாது
மேலும் சாப்பிட்ட உடனேயே தூங்க வேண்டாம். ஏனெனில் இது உங்கள் உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தையும் குறைக்கிறது. மேலும் இதனால் உண்ட உணவு சரியாக ஜீரணமாகாது.
இவற்றை ஒருபோதும் செய்யாதீங்க
செரிமான ஆரோக்கியத்தைப் பேண உணவுக்குப் பிறகு நீச்சல், பயணம் மற்றும் உடற்பயிற்சியையும் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்
டீ, காபி குடிக்க கூடாது
சாப்பிட்டவுடன் டீ, காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் இனிமேல் அதை நிறுத்துங்கள். ஏனெனில் தேநீரில் உள்ள டானிக் அமிலம் உணவில் உள்ள புரதத்தையும் இரும்புச்சத்தையும் உறிஞ்சிவிடும். இது உணவில் இருந்து உடலுக்குத் தேவையான புரதங்களைப் பெறுவதைத் தடுக்கிறது.