- Home
- உடல்நலம்
- Foods For Back Pain : அடிக்கடி தாங்க முடியாத முதுகு வலி வருதா? இந்த '3' உணவுகள் போதும்!! இனி வலி வராது
Foods For Back Pain : அடிக்கடி தாங்க முடியாத முதுகு வலி வருதா? இந்த '3' உணவுகள் போதும்!! இனி வலி வராது
தாங்க முடியாத முதுகுவலியை கூட நீங்க வைக்கும் 3 உணவுகளைப் பற்றி இங்கு காணலாம்.

Best Foods For Back Pain Prevention
இன்று நம்மில் பலர் முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறோம். முதுகு வலி வந்தால் பலரால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. நாம் நேராக நிற்க, நடக்க, அமர, படுக்க என உடலின் பல இயக்கத்திற்கு முழு ஆதாரமாக விளங்குவது முதுகெலும்புதான். அங்கு இன்ஃபிளமேஷன்கள் ஏற்பட்டால் முதுகுவலி வரும் வாய்ப்புள்ளது.
Back Pain
பெரும்பாலும் ஏற்படும் முதுகெலும்பு பிரச்சினைகளை குறைக்க உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்க வேண்டும். ஏனென்றால் இதுவே எலும்புகளின் அடர்த்தியை குறைக்கிறது. இதை சரிசெய்தால் எலும்புகளின் வலியைக் குறைக்க வாய்ப்புள்ளது. முதுகெலும்பு மற்றும் அதன் டிஸ்க் மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்க எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என காணலாம்.
கடல் உணவுகள்
மீன், கடல் உணவுகள் புரதச்சத்து கொண்டவை மட்டுமல்ல; எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதும் கூட. கடல் மீன்களில் கால்சியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பொதுவாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை இதயம், மூளையின் செயல்பாட்டுக்கு முக்கியம் என்பார்கள். ஆனால் அதைப் போலவே முதுகெலும்பு, தண்டுவட ஆரோக்கியத்துக்கும் கடல் மீன்கள் நல்லது. வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் மீன் உண்ணலாம். அசைவம் சாப்பிட விரும்பாதவர்கள் ஆளி விதைகள் உண்ணலாம்.
ஆளி விதைகள்
பலரும் ஆளி விதையின் நன்மைகளை அறிந்திருப்பதில்லை. இதன் விலை குறைவு. சத்துக்களோ அதிகம். இதிலும் ஒமேகா 3 காணப்படுகிறது. தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் எலும்புகளில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்கள் பிரச்சினையை தவிர்க்கலாம். முதுகுவலி தொந்தரவே வராது. வறுத்த ஆளி விதையை 1 ஸ்பூன் சாப்பிட்டாலும் போதும். இட்லி பொடியில் சேர்த்தும் சாப்பிடலாம்.
வால்நட்
மூளையை ஒத்த வால்நட் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் கொண்டது. நாள்தோறும் ஒரு கைப்பிடி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதை உண்பதால் முதுகெலும்பு, தண்டுவடம் ஆரோக்கியமாக இருக்கும். முதுகில் உள்ள வலி குறையலாம்.
இங்கு சொல்லப்பட்டுள்ள உணவுகள் உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களை குறைக்கும். இது தவிர, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட கடல் உணவுகள், சிப்பி, சியா விதைகள், ஆலிவ் ஆயில், பாதாம் போன்றவையும் உண்ணலாம். அன்றாடம் ஏதேனும் கீரை வகையையும் உண்ணலாம்.