- Home
- உடல்நலம்
- மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகள்..இப்படி ஒருமுறை தயார் செய்து சாப்பிட்டு பாருங்கள்..!
மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகள்..இப்படி ஒருமுறை தயார் செய்து சாப்பிட்டு பாருங்கள்..!
Monsoon drinks to immunity Tips Tamil: மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் ஆபத்து அதிகம் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

மழைக்காலம் துவங்கிவிட்டால் உடலில் பல்வேறு நோய் தொற்றுகள் வரும். இந்த நேரத்தில் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் தொற்றுநோய்களின் ஆபத்துக்கு சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும், மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
எனவே இந்த காலகட்டத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் பழங்கள் மற்றும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர்கள் சூடான சூப் வகைகளையே அதிகம் பரிந்துரை செய்கிறார்கள். அவை என்னென்னெ உணவுகள் என்பதை பார்ப்போம்.
சூப்கள் மற்றும் டீ:
மழைக்காலத்தில் தேநீர் எப்போதுமே இதமான உணர்வு தரக்கூடியது. எனவே க்ரீன் டீ, பிளாக் டீ, மசாலா டீ என உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு தேநீரை பருகலாம். அதேபோல் காய்கறிகள், சிறுதானியங்கள் அல்லது பருப்பு வகைகள் அடங்கிய சூப்களும் மழைக்காலத்திற்கு நல்ல பார்ட்னர் தான்.
தாமரை விதை ஸ்மூத்தி:
தாமரை விதை தயார் செய்வதற்கு 1 டீஸ்புன் வேர்க்கடலை, 1 டீஸ்புன் முந்திரி மற்றும் 1/4 லிட்டர் பால் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு மிக்சியில் ஸ்மூத்தியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில்உங்களுக்கு விருப்பம் என்றால் தேன் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான, ஆரோக்கியம் நிறைந்த மக்கானா ஸ்மூத்தி ரெடி.
நெல்லிக்காய், இஞ்சி ஜூஸ்:
வேகவைத்த நெல்லிக்காயில், இஞ்சி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். இப்போது, சூடான நெல்லிக்காய், இஞ்சி ஜூஸ் தயார்!
ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி இந்த சாற்றை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது. இதில் ஆக்ஸினேற்ற மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் காணப்படுகின்றன. அதேபோன்று, இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைய காணப்படுகிறது. மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.