தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி..வெறும் 5 நிமிடம் இருந்தால் போதும்..டேஸ்டியான கார அப்பம் இப்படி செய்து அசத்தலாம்.!
Kara appam recipe in Tamil: வீட்டில் இருந்தபடியே வெறும் 5 நிமிடத்தில் தீபாவளி பலகாரம் ருசியாக எப்படி செய்து அசத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தீபாவளி நாட்கள் துவங்கிவிட்டாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த நாட்களில் ஒரு வாரம் முழுவதும் விதமான பலகாரங்கள் வீட்டில் செய்யப்படும். ஆனால், இப்பொழுது எல்லாம் வீட்டில் யாரும் பலகாரம் செய்யாமல், கடைகளில் ஆர்டர் செய்து தீபாவளியை கொண்டாடி மகிழ்கின்றனர். இவை, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் வீட்டில் இருந்தபடியே வெறும் 5 நிமிடத்தில் தீபாவளி பலகாரம் ருசியாக எப்படி செய்து அசத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
செய்முறை விளக்கம்:
கோதுமை மாவு ஒரு – 1 கப்
பச்சரிசி - 2 கப்
முழு வெள்ளை உளுந்து - ¼ கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
பச்சைமிளகாய் - 2
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
தேங்காய் –நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக நீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
கரைத்து வைத்திருக்கும் இந்த மாவில் பொடியாக நறுக்கிய உப்பு, இஞ்சித்துருவல், பச்சைமிளகாய் அரிந்து போட்டு, கறிவேப்பிலையை போன்ற பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்குள் ஒரு பக்கத்தில், அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். காய்ந்ததும் கலந்தமாவினை ஒரு கரண்டியால் எடுத்து ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் எடுக்கவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள ஒரு தேங்காய் சட்னி போதும் செம டேஸ்டா இருக்கும். மாலை வேளையில் கொடுத்து பாருங்கள், இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயம், விரும்பி சாப்பிடுவார்கள்.