வீட்டிலேயே இன்ஸ்டன்ட் மிக்சர் தயார் செய்வது எப்படி..? இந்த தீபாவளியை ருசியான ஸ்நாக்ஸ் செய்து கொண்டாடுங்கள்..!
Semiya Mixture: இந்த தீபாவளிக்கு எந்த விதமான சிரமமும் இல்லாமல், ஒரு பாக்கெட் சேமியா வைத்து மொறு மொறுன்னு சூப்பரா இந்த மிக்சர் தயார் செய்து அசத்தலாம். அவை எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தீபாவளி வந்தாலே பலகாரம்,கொண்டாட்டம் நிறைந்து இருக்கும். நாம் இன்றைய காலத்தில் எல்லாம் கடைகளில் காசு கொடுத்து தான் தீபாவளி பலகாரம் வாங்கி கொடுக்கிறோம். காரணம், வீட்டில் ஸ்நாக்ஸ் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால் தான். ஆனால் இந்த தீபாவளிக்கு எந்த விதமான சிரமமும் இல்லாமல், ஒரு பாக்கெட் சேமியா வைத்து மொறு மொறுன்னு சூப்பரா இந்த மிக்சர் தயார் செய்து அசத்தலாம். அவை எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இது பலவிதமான பொருட்களை போட்டு செய்தால் நமது விருப்பத்திற்கு ஏற்ப பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். பொட்டுக்கடலை, முந்திரி பருப்பு, வேர் கடலை, போன்றவை சற்று கூடுதலாக சேர்த்து செய்தால் அனைவரும் விரும்புவார்கள்.
செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சேமியாவை வேக வைத்து ஒரு சல்லடையில் ஊற்றி, வடிகட்டி விடுங்கள். சேமியா குழையாது உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.
மிக்ஸரில் சேர்க்கும் ஓமப்பொடி செய்யும்போது ஓமம் சேர்க்கத் தேவை இல்லை. நீங்கள் விருப்பப்பட்டால் சிறிதளவு ஓமத்தை மிக்ஸியில் அரைத்து சிறிது நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை ஓமப்பொடி மாவுடன் கலந்து பிசையவும்.
பூந்தி, ஓமப்பொடி செய்யும்பொழுது தீயை சற்று கூடுதலாக வைத்துக் கொள்ளவும், பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.
உப்பு மற்றும் காரம் உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். கருவேப்பிலை பொறிக்கும் பொழுது அடுப்பை அணைத்துவிட்டு பொரிக்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய், கடலைப்பருப்பு, வேர்கடலை, சேர்த்து நன்றாக வறுத்துக் கொட்ட வேண்டும்.