Fiber foods: உடலில் நச்சுக்களை வெளியேற்ற உதவும் நார்ச்சத்து உணவுகள்! தினமும் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
Fiber rich foods: நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது உடலில், நச்சுக்கள் நீங்கி வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது.
நமது உடலில் நச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நச்சுக்கள் நீங்கி வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. மேலும், இந்த உணவுகள் உடலில் சரும பாதிப்பு முதல் புற்றுநோய் பாதிப்பு வரை வராமல் பாதுகாக்கிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
நார்ச்சத்து உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
1. நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், உடல் எடையை குறைக்கவும் நார்சத்து உணவுகள் உதவுகிறது
2., வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்பட வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் காரணமாக அமைகின்றது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இந்த வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன.
3. நார்ச்சத்து நிறைந்த சில உணவுகள், உங்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், இரத்த குளுக்கோஸ் அளவைப் பராமரிக்கவும் உதவும். எனவே, நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக தேன் பயன்படுத்தலாம்.
3. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தண்ணீரை விட எதுவும் சிறப்பாக செயல்பட முடியாது என்றே கூறலாம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.
4. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்துவதாக ஆராய்ச்சிகள் பல கூறுகின்றனர்.
4. நார்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இவை உங்களை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், பசிகளைக் கட்டுப்படுத்தவும், உங்கள் உடல் நச்சுத்தன்மையை இயற்கையாகவே வெளியேற்றவும் உதவும்.
பழங்களில், செரிப்பழம், திராட்சைப்பழம், முலாம்பழம், அத்திப்பழம், பேரிக்காய், ஓட்ஸ், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவை ஆகும். காய்கறிகளில், வெண்டைக்காய், பச்சை பட்டாணி, ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், முட்டைக்கோஸ், கேரட், அவகாடோ, ஓட்ஸ் போன்றவற்றில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது.