காய்ச்சாத பச்சை பாலில் 'காய்ச்சல்' வைரஸ் இருக்குமா? ஆய்வில் பகீர் தகவல்!!
Flu Virus and Raw Milk : பதப்படுத்தப்பட்ட பால் பொருள்களில் இன்ஃப்ளூயன்ஸா அல்லது ஃப்ளூ வைரஸ் இருக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காய்ச்சாத பச்சை பாலில் 'காய்ச்சல்' வைரஸ் இருக்குமா? ஆய்வில் பகீர் தகவல்!!
கறவை மாடுகளில் பறவைக் காய்ச்சல் தாக்குவது குறித்த புதிய தொற்றின் ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. ஏ.என்.ஏவில் வெளியான செய்தியில் இது குறித்த ஆய்வினை வெளியிட்டிருந்தார்கள். அதில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வு குறித்து கூறப்பட்டது. காய்ச்சாத பச்சைப் பாலை குடிப்பது பறவைக்காய்ச்சலை உண்டு பண்ணலாம் என தெரிய வந்துள்ளது.
காய்ச்சாத பச்சை பாலில் ஃப்ளூ
பச்சை பாலில் காய்ச்சல் வைரஸ், பறவைக் காய்ச்சல் வைரஸ் ஆகியவை இருக்க வாய்ப்புள்ளது. இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அமெரிக்காவில் 14 மில்லியனுக்கும் அதிகமானோர் வருடந்தோறும் பச்சைப் பாலை குடிக்கிறார்கள். ஆண்டுதோறும் மூலப் பாலை உட்கொள்கிறார்கள். பாலை காய்ச்சாமல் அப்படியே குடிப்பதால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் செல்லலாம். காய்ச்சிய பாலை விட கொதிக்கவிடாத பச்சைப் பாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், என்சைம்கள், புரோபயாடிக்குகள் காணப்படலாம். நோயெதிர்ப்பு சக்தி, இரைப்பை, குடல் ஆகிய உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என கூறப்பட்டாலும் அதை அப்படியே குடிப்பது நல்லதல்ல. பாலை எப்போதும் கொதிக்க வைத்தே அருந்தவேண்டும்.
பச்சை பால் ஆரோக்கியமா?
உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் 200க்கும் மேற்பட்ட நோய்களுக்கு காய்ச்சாத மூலப் பால் காரணமாக உள்ளது. பச்சை பாலில் ஈ. கோலை, சால்மோனெல்லா ஆகிய நுண்கிருமிகள் காணப்படுகின்றன. இதனால் உடல்நலக் கோளாறுகள் வருகின்றன. குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பச்சை பாலை குடிக்கவே கூடாது.
பச்சை பாலில் உள்ள பிரச்சனை:
ஃபிரிட்ஜில் உள்ள குளிர்நிலையில் வைக்கப்பட்டுள்ள பசுவின் பாலில் மனித இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இருப்பு குறித்து ஆராயப்பட்டது. H1N1 PR8 என அழைக்கப்படும் காய்ச்சல் வைரஸ் ஃபிரிட்ஜில் இருக்கும் பாலில் 5 நாட்கள் வரை இருக்கிறது. இப்படி பச்சை பாலில் வைரஸ் நீண்ட காலம் இருப்பது நோயை உண்டாக்கலாம். ஆகவே ஃபிரிட்ஜில் பாலை வைக்கும்போது கொதிக்க வைத்து ஆறிய பின் வைக்கலாம். பாலை எப்போதும் கொதிக்க வைத்தே குடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: பால் காய்ச்சாமல் பிரிட்ஜில் வைத்தால் 'இப்படி' ஒரு பிரச்சனை வரும் தெரியுமா? உஷாரா இருங்க!!
ஏன் காய்ச்ச வேண்டும்?
கொதிக்க வைக்கப்பட்ட பாலில் உள்ள தொற்று ஏற்படுத்தும் வைரஸ் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. பாலை காய்ச்சும்போது அந்த வைரஸ் ஆர்என்ஏவின் அளவை கிட்டத்தட்ட 90% குறைக்கிறது. இதிலிருந்து முற்றிலும் வைரஸ் ஆர்என்ஏவை நீக்க முடியாது. இது ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு.. உன்னிப்பாக கண்காணித்து வரும் மத்திய அரசு.. வெளியான முக்கிய தகவல்..
பாலில் உள்ள வைரஸ்கள்:
இன்ஃப்ளூயன்ஸா A(H5N1) வைரஸ், பறவைக் காய்ச்சல் வைரஸ் ஆகியவை பச்சை பாலில் இருக்கலாம். நாம் வீடுகளில் வளர்க்கும் கறவை மாடுகளில் கூட பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பதாகல் கண்டறியப்பட்டுள்ளது. கடைகளில் பதப்படுத்தி விற்கும் குளிரூட்டப்பட்ட மூலப் பாலில் (raw milk) காய்ச்சல் வைரஸ் இருக்கும் வாய்ப்புள்ளது. காய்ச்சாத பச்சைப் பாலில் பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் இருக்க வாய்ப்புள்ளதால் கொதிக்க வைத்து அருந்துவது அவசியமாகும்.