MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பால் காய்ச்சாமல் பிரிட்ஜில்  வைத்தால் 'இப்படி' ஒரு பிரச்சனை வரும் தெரியுமா? உஷாரா இருங்க!! 

பால் காய்ச்சாமல் பிரிட்ஜில்  வைத்தால் 'இப்படி' ஒரு பிரச்சனை வரும் தெரியுமா? உஷாரா இருங்க!! 

Refrigerating Raw Milk : பால் காய்ச்சாமல் பிரிட்ஜில் வைத்தால் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என இந்த பதிவில் காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 14 2025, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Raw milk storage tips in tamil

Raw milk storage tips in tamil

பசும்பால் குடிப்பது தமிழ்நாட்டில் பரவலாக காணப்படுகிறது. பசும் பால் அளவிற்கு எருமைப் பால் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை. முன்பு மக்கள் பாலை வாங்கி அதை காய்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்துவார்கள். இப்போதெல்லாம் வாங்கியதும் பிரிட்ஜில் வைத்திவிட்டு தேவைப்படும் போது பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது அவ்வளவு நல்ல நடைமுறை அல்ல. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Refrigerating raw milk in tamil

Refrigerating raw milk in tamil

ஒருவேளை பசுவுக்கு அல்லது அந்த எருமைக்கு ஏதேனும் தொற்று இருந்தால் அதனுடைய வைரஸ் பாலிலும் இருக்கும். நீங்கள் பாலை சரியாக காய்ச்சாமல் அல்லது பாலை வாங்கி அப்படியே பிரிட்ஜில் வைக்கும் போது அந்த வைரஸ் உயிர்ப்போடு இருக்கும். அண்மையில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் செய்த ஆய்வில், காய்ச்சாத பாலை குளிரூட்டினால், அதில் காய்ச்சல் ஏற்படுத்தக் கூடிய வைரஸ் 5 நாட்கள் வரை இருக்கலாம் என கண்டறியப்பட்டது.  

இதையும் படிங்க:  Milk: பாலை காய்ச்சாமல் குடிக்கலாமா? அப்படி குடித்தால் உடலில் என்ன மாற்றம் நிகழும்..!..நிபுணர்கள் விளக்கம்....

35
Dangers of refrigerating raw milk in tamil

Dangers of refrigerating raw milk in tamil

வைரஸ் அபாயம்

குளிர்காலத்தில் காய்ச்சலை ஏற்படுத்தும், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சாத பச்சை பாலில் ரொம்ப நாள்கள் வாழும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பருவ காலங்களில் தொற்றுநோய் பரவுவது வழக்கமாகிவிட்டது.  இந்நேரத்தில் மாடுகளில் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. பசும் பால் அல்லது எருமை பால் எதுவாக இருந்தாலும் அதை நன்கு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பாலை தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும். 

இதையும் படிங்க:  பச்சை பாலில் முகம் கழுவுறவங்க '40' வயசானாலும் இளமையா இருக்கலாம் தெரியுமா?

45
Handling and storing raw milk in tamil

Handling and storing raw milk in tamil

பாலை ஏன் காய்ச்ச வேண்டும்? 

காய்ச்சாத பச்சைப் பால் குடிப்பதால் பறவைக் காய்ச்சல் வரும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதில் ஒருவேளை வைரஸ் இருந்தால் உங்களை தாக்கக் கூடும். பாலை கொதிக்க வைப்பது அதில் உள்ள  தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை நீக்கும்  செயல்முறை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பச்சை பால் அருந்தினால் நோய்த்தொற்று வரலாம். 

55
Raw milk safety in tamil

Raw milk safety in tamil

பச்சை பாலில் சத்து அதிகமா? 

காய்ச்சிய பாலை விட பச்சை பாலில் நிறைய ஊட்டச்சத்துகள், என்சைம்கள், புரோபயோடிக் இருப்பதாக சிலர் நம்புகின்றனர். நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகும் எனவும் நம்பப்படுகிறது.   ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. காய்ச்சாத பாலை குடித்தால் 200 க்கும் மேற்பட்ட நோய்கள் வரக் கூடும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது. காய்ச்சாத பச்சை பாலில் ஈ. கோலை, சால்மோனெல்லா உள்ளிட்ட  பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த பாக்டீரியாக்கள் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பு சக்தி பலவீனமானவர்களுக்கு நோய் உண்டாக்கும் அபாயம் உள்ளது. ஃப்ளூ வைரஸின் ஆர்என்ஏ 57 நாட்கள் வரை பச்சைப் பாலில் இருக்க வாய்ப்பிருப்பதாக  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாலை காய்ச்சும்போது வைரஸ் முற்றிலும் நீங்கும். பறவைக் காய்ச்சல் மாதிரியான  நோய்த்தொற்று பரவும் நேரத்தில் காய்ச்சாத பாலை மறந்தும் குடிக்கக் கூடாது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved