ஆபீஸ் மெஷின் காபி குடிச்சா மாரடைப்பு கன்பார்ம் - அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்
அலுவலகத்தில் இருக்கும் காபி மெஷினில் அடிக்கடி காபி குடித்தால் அது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்க செய்யும் என்று புதிய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Office Coffee Increases Heart Disease : தற்போது ஒவ்வொரு அலுவலகத்திலும் காபி மெஷின் இருப்பது மிகவும் பொதுவாகிவிட்டன. காபி குடிப்பது போல மனநிலை மேம்படுவது மட்டுமல்லாமல், ஆற்றலையும் தரும். அலுவலக காபி இயந்திரத்தில் இருந்து பிளாக் காபி, பால் காபி, கப்புசினோ குடிக்க விரும்புவார்கள். ஆனால் உண்மையில் அலுவலக காபி இயந்திரத்தில் இருந்து ஒரு நாளைக்கு பலமுறை காபி குடித்தால் அது உங்களது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மெஷின் காபி குடித்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்தில் வெளிவந்த ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
Office Machine Coffee Increases Heart Disease
ஆபீஸ் மெஷின் காபி இதயத்தை எப்படி பாதிக்கும்?
சமீபத்தில் வெளிவந்த ஆய்வு ஒன்றில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வீட்டில் தயாரித்து குடிக்கும் காபியை விட அலுவலகத்தில் இருக்கும் மெஷின் காபியில் உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கும் மோசமான தீங்கு விளைவுக்கும் சேர்மங்கள் இருப்பதாக புதிய ஆய்வு கண்டறிந்துள்ளன. எனவே மிஷின் காப்பியை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, இதய ஆரோக்கியத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காபி கெட்ட 'கொழுப்பை' கரைக்கும் தெரியுமா? பலரும் அறியாத '5' வகை காபி!!!
Office Machine Coffee Increases Heart Disease
14 அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு:
இழுக்குறித்து சூரியனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 14 அலுவலகங்களில் இருக்கும் மெஷின் காபி மாதிரிகளை பகுப்பாய்வு செய்தனர். அதை வீட்டு காபியுடன் ஒப்பிட்டபோது அலுவலக மிஷின் காபியில் அதிகளவு கேஃபெஸ்டால் மற்றும் கஹ்வியோல் இருப்பதை கண்டுபிடித்தனர். இது உடலில் அதிக அளவு கொழுப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் காரணியாகும்.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ 'இந்த' பிரச்சனைகள் உங்களுக்கு வரும்!
Office Machine Coffee Increases Heart Disease
அலுவலக மெஷின் காப்பியை குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்:
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் - ஒரு நாளைக்கு நீங்கள் மூன்று அல்லது அதற்கு மேல் காபி குடித்தால் உங்களை அறியாமலேயே உங்களது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று ஆய்வு கூறுகின்றது.
Office Machine Coffee Increases Heart Disease
அசிடிட்டி பிரச்சினை அதிகரிக்கும் - அலுவலக மிஷின் காபி உங்களை சுறுசுறுப்பாகவும் விழிப்பாகவும் வைத்திருக்க தூண்டும் என்றாலும், அதை நீங்கள் அளவுக்கு அதிகமாக குடித்தால் பதட்டம், நரம்பு பிரச்சனையை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோய் மற்றும் எடை அதிகரிப்பு - சில சமயங்களில் மெஷின் காபியில் சர்க்கரை மற்றும் சிரப்கள் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே, இதை நீங்கள் தொடர்ந்து அதிகமாக குடித்து வந்தால் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இது தவிர நீரிழிவு நோய் வருவதற்கு வழிவகுக்கும். மேலும் இந்த காபி குடித்தால் நெஞ்செரிச்சல் அமிலத்தன்மை ஏற்படலாம்.
Coffee Benefits
காபி நன்மைகள்:
காபி குடிப்பது போல நிறைய ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். ஐரோப்பிய தடுப்பு இதயவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று கப் காபி குடிப்பவர்களுக்கு காபியை குடிக்காதவர்களை விட இதய நோய் மற்றும் ஆரம்ப கால இறப்பு ஆபத்து குறைவாக இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.