- Home
- உடல்நலம்
- வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ 'இந்த' பிரச்சனைகள் உங்களுக்கு வரும்!
வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ 'இந்த' பிரச்சனைகள் உங்களுக்கு வரும்!
Black Coffee On An Empty Stomach : பிளாக் காபி மட்டுமல்ல பால் காபி, பால் டீ ஆகவற்றையும் வெறும் வயிற்றில் குடிக்க கூடாது. மீறினால் பல உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ 'இந்த' பிரச்சனைகள் உங்களுக்கு வரும்!
காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால் அவர்களது நாள் டீ-காபியுடன் தொடங்கி முடிகிறது. அதிலும் குறிப்பாக சிலர் எடையை கட்டுப்படுத்துவதற்காக வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிக்க விரும்புவார்கள். இன்னும் சிலர் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிப்பது ஒரு பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால், பிளாக் காபி, டீ மற்றும் பால் காபி, பால் டீ ஆகியவற்றை குடிக்கவே கூடாது தெரியுமா? மீறினால் பல உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிளாக் காபி உடலுக்கு நல்லது தான் ஆனால் அதை வெறும் வயிற்றில் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிப்பதால் வரும் பிரச்சினைகள்:
நம்மில் சிலருக்கு பிளாக் காபி குடிப்பது ரொம்பவே பிடிக்கும், பிளாக் காபி குடிப்பதால் எந்தவித தீங்கும் விளைவிக்காது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் பிளாக் காபியை வெறும் வயிற்றில் குடிப்பது நிறைய தீங்கு விளைவிக்கும். இதன் காரணமாக உங்களுக்கு அமிலத்தன்மை மற்றும் வாய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தொடர்ந்து நீங்கள் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடித்து வந்தால் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் கால்சியம் குறைபாடும் ஏற்படும்.
இதையும் படிங்க: காபி குடித்தால் மாரடைப்பு வராதா? ஆய்வு சொல்லும் உண்மை!! எப்படி காபி குடிக்கலாம்?
ஒரு நாளைக்கு எத்தனை பிளாக் காபி குடிக்கலாம்?
நிபுணர்களின் கூற்றுப்படி, வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிப்பது உங்களுக்கு அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இதன் காரணமாக மலச்சிக்கல், வைட்டமின் பி 12 மற்றும் கால்சியம் குறைபாடு ஏற்படத் தொடங்கும். பிளாக் காபி ஒருபோது குடிக்க வேண்டாம். அதுபோல நீங்கள் ஒரு நாளைக்கு 2-3 கப்புக்கு மேல் பிளாக் காபி குடிக்க வேண்டாம். இல்லையெனில், எதிர்காலத்தில் உங்களது உடலில் பல பிரச்சனைகள் உருவாகும்.
இதையும் படிங்க: பால் காபி vs பிளாக் காபி.. காபி பிரியர்கள் அறியாத தகவல்.. காலைல 'இதை' குடிங்க!!
பிளாக் காபி குடிக்க சரியான நேரம் எது?
நீங்கள் பிளாக் காபி குடிக்க விரும்பினால் சரியான நேரத்தை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதாவது காலை உணவு அல்லது உணவுக்குப் பிறகு சுமார் 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து பிளாக் காபி குடிக்க வேண்டும். பிளாக் காபி உடலில் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்தும். எனவே, வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாப்பிட்டு பிறகு தான் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.