ஆப்பிள் சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்காதீங்க; இல்லன்னா டேஞ்சர் தான்!
Drinking Water After Eating Apple : ஆப்பிள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

ஆப்பிள் சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்காதீங்க; இல்லன்னா டேஞ்சர் தான்!
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆப்பிளில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்களும் உள்ளன. நம்மில் பலருக்கு டீ, காபி, ஏதாவது உணவு அல்லது பழங்கள் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும் அந்த வகையில் ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா? கூடாதா? அப்படி குடிப்பது நல்லதா? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.
ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்
ஆனால் உண்மையில், ஆப்பிள் சாப்பிட்டவுடனேயே தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே இந்த பதிவில் ஆப்பிள் சாப்பிட்ட பின் தண்ணீர் ஏன் குடிக்க கூடாது. அதனால் ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகள் என்ன மற்றும் ஆப்பிள் சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
ஆப்பிள் சாப்பிட்டு பிறகு ஏன் உடனே தண்ணீர் குடிக்க கூடாது?
பொதுவாக நம் வயிற்றில் சாதாரண pH அளவு அமலத்தன்மை கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஆப்பிள் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் அது வயிற்றில் pH அளவை மோசமாக பாதிக்கும். இன்னும் சொல்ல போனால் தண்ணீர்னது pH அளவை குறைக்கும். பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை மற்றும் ஈஸ்ட் அதிகமாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் அது வயிற்றில் அமிலத்தை நீர்த்துப்போக செய்யும். இதனால் உங்களது வயிற்றில் ஈஸ்ட் வளர தொடங்கும். இதன் காரணமாக வயிற்றில் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் ஆல்கஹால் உற்பத்தியாகி, வயிற்றில் வாயுவை தூண்டும். இது தவிர, செரிமான முறையை சீர்குலைக்கும்.
இதையும் படிங்க: ஆப்பிளை இப்படி சாப்பிடுங்க; அப்ப தான் முழு சத்தும் கிடைக்கும்!
ஆப்பிள் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
- நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படும்.
- செரிமானம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், செரிக்கப்படாத உணவானது கொழுப்பாக மாற்றப்படும்.
- உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது.
- வயிற்று வலி மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
ஆப்பிள் சாப்பிட்டபின் எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஆப்பிள் மட்டுமல்ல எந்த ஒரு பழத்தையும் சாப்பிட்ட பிறகு சுமார் 1 மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஆப்பிளை தோலுடன் சாப்பிட வேண்டுமா? அல்லது தோல் இல்லாமல் சாப்பிட வேண்டுமா? எது சிறந்த வழி?