- Home
- உடல்நலம்
- Stomach Cancer : உலகளவில் அதிகரிக்கும் வயிற்றுப் புற்றுநோய்; திடீர் காரணம் என்ன? பின்னணி இதோ!!
Stomach Cancer : உலகளவில் அதிகரிக்கும் வயிற்றுப் புற்றுநோய்; திடீர் காரணம் என்ன? பின்னணி இதோ!!
வயிற்றுப் புற்றுநோய்களைத் தடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு காணலாம்.

சமீபத்தில் நேச்சர் மெடிசினில் வெளியான புதிய ஆய்வில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் உலகளவில் 50 வயதிற்குட்பட்டகளுக்கு வயிற்றுப் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பது தெரிய வந்தது. வருங்காலத்தில் இந்தப் போக்கு அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. இப்படி பரவக் கூடிய நோயானது பெரும்பாலும் ஹெலிகோபாக்டர் பைலோரி (H. பைலோரி) தொற்றுடன் தொடர்புடையது. நாள்பட்ட ஹெச் பைலோரி தொற்று இரைப்பை புற்றுநோய்க்கான மோசமான ஆபத்து காரணி. இதற்கு சிகிச்சை முறைகள் இருந்தாலும் ஆபத்தானவை.
உலக சுகாதார அமைப்பின் ஒரு பகுதியான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IARC) ஆராய்ச்சியாளர்கள், கிட்டத்தட்ட 2008 மற்றும் 2017 க்கு இடையில் பிறந்தவர்களில் உலகளவில் 15.6 மில்லியன் பேருக்கு புதிய வயிற்றுப் புற்றுநோய்கள் வர வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர். நேச்சர் மெடிசின் இதழில் வெளியான ஆய்வு தகவல்களின்படி, இந்த வழக்குகளில் 76% ஹைட்ரோகார்பன் பைலோரியால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இது தடுக்கக் கூடியதுதான்.
ஹெலிகோபாக்டர் பைலோரி (H. pylori) பாக்டீரியா தொற்று வந்தால் அது இரைப்பை புற்றுநோயை உண்டாக்கும். வயிற்றின் புறணியில் காணப்படும் இந்த பாக்டீரியா இரைப்பை அழற்சி, வயிற்றுப் புண்கள், இரைப்பை புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
வயிற்றுப் புற்றுநோயை தடுக்கும் வழி
ஹைட்ரோகார்பன் பைலோரி (H. pylori) புற்றுநோயைத் தடுக்க சில விஷயங்களை பின்பற்றலாம். புகைபிடித்தல், மதுப்பழக்கம் தவிர்க்க வேண்டும். இவை புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவு பழக்கம், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை உணவில் அதிகம் சேருங்கள். இது நோய் அபாயத்தை குறைக்கும். அதிக உப்பு, நைட்ரேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் இரைப்பை புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும். அவற்றை உண்ணாமல் தவிர்க்கவும். இது வயிற்றை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
உடலில் அசாரணமாக அறிகுறிகள் தென்பட்டால் அது ஹெலிகோபாக்டர் பைலோரியாக இருக்கும்பட்சத்தில் விரைந்து மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும். சிகிச்சையால் இத்தொற்று நீக்கப்படும்போது, புற்றுநோய் வாய்ப்பு குறையும்.