நீங்கள் செய்யும் இந்த தவறால் தான் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்க காரணம்..! அவை...
நம் உடலில் யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு காரணமாக, பல ஆபத்தான நோய்கள் வர தொடங்குகின்றன. எனவே, இவற்றை கட்டுக்குள் வைத்திருக்க சில குறிப்புகள் இங்கே உள்ளன. அவை..
உங்களுக்கு தெரியுமா..? அதிக யூரிக் அமிலம் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கை, கால்களில் வீக்கம், வலி, நடப்பதில் சிரமம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்நோய் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நமது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம்.
புரத உணவுகள் யூரிக் அமிலத்தை உயர்த்துவது எப்படி?
யூரிக் அமிலம் புரத வளர்சிதை மாற்றத்திற்குப் பிறகு உருவாகிறது மற்றும் பெரிய அளவில் சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது. சில காரணங்களால் குறைந்த அளவு யூரிக் அமிலம் சிறுநீரில் வெளியேறத் தொடங்கினால், இரத்தத்தில் அதன் அளவு அதிகரிக்கிறது. குறிப்பாக, ஒரு நோயாளிக்கு சிறுநீரக நோய் இருந்தால், அவரது யூரிக் அமிலம் உடலில் தங்கி இரத்தத்தில் அதன் அளவை அதிகரிக்கிறது.
உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்க என்ன காரணம்?
குளிர்ச்சியான பீர் அருந்துவது
குறைவாக தண்ணீர் குடிப்பது
மதுக்கு அடிமை
புரத உணவுகளை அதிகமாக சாப்பிடுவது
பரம்பரை போன்றவையாகும். இந்த சில காரணங்களால் தான் உடலில் யூரிக் அமிலத்தின் உற்பத்தி அதிகரிக்கிறது.
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் என்ன நடக்கும்?
உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், மூட்டுகளில் வலி ஏற்படும். மேலும் நோயாளிக்கு எப்போதும் காய்ச்சல் உணர்வு இருக்கும்
இதையும் படிங்க: யூரிக் அமிலத்தை விரைவில் குறைக்க உதவும் 5 இலைகள் என்ன தெரியுமா?
அதுபோல, ஒரு நபருக்கு எப்பொழுதும் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால், அவருக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கும். மேலும், இவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதையும் படிங்க: அளவுக்கு மீறினால் கால்களை பதம் பார்க்கும் யூரிக் அமிலம்- கவனம் இருக்கட்டும்..!!
இந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம்: சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள், பருப்பு வகைகள், பலாப்பழம் மற்றும் உலர் திராட்சைகளில் பிரக்டோஸ் இருந்தால் அவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும். மீன் போன்ற பிற கடல் உணவுகள் உட்பட பியூரின் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இவற்றை சாப்பிடுங்கள்:
வாழைப்பழம்
ஆப்பிள் பழம்
செர்ரி பழம்
காபி குடிக்கலாம்
அனைத்து வகையான சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடலாம்.