- Home
- உடல்நலம்
- Weight Loss Tips : இதுக்காக 'ஜிம்' போறதே வேஸ்ட்! ஈஸியா எடையை குறைக்கும் '6' வீட்டு வேலைகள் தெரியுமா?
Weight Loss Tips : இதுக்காக 'ஜிம்' போறதே வேஸ்ட்! ஈஸியா எடையை குறைக்கும் '6' வீட்டு வேலைகள் தெரியுமா?
வீட்டிலில் இருந்தே எடையைக் குறைக்க உதவும் வேலைகள் குறித்து தெரியுமா? இந்தப் பதிவில் வீட்டு வேலைகளால் எடையை குறைக்கும் தந்திரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

Weight Loss Tips
உடல் எடையை குறைக்க மக்கள் பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். அதில் உடற்பயிற்சிகளும் அடங்கும். கடுமையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகள் எடையை குறைக்கும்தான். ஆனால் எந்த விஷயத்தையும் கடுமையாக முயன்றால் நாளடைவில் அதில் விருப்பம் இல்லாமலே போய்விடும். இதற்கு பதிலாக நாம் ஏற்கனவே செய்யும் விஷயங்களை கூடுதல் கவனமாகவும், அர்ப்பணிப்புடனும் செய்தால் எடையை சுலபமாகக் குறைக்கலாம். இந்தப் பதிவில் வீட்டு வேலைகளால் எடையை குறைக்கும் தந்திரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
வீட்டிற்கு மாப் போடுதல்!
பொதுவாக வீட்டிற்கு மாப் போடும் முன் அதை பெருக்கி சுத்தம் செய்வோம். அதன் பின்னரே மாப் போடத் தொடங்குவோம். வீட்டின் அளவை பொறுத்து நேரமும், உடல் உழைப்பும் மாறுபடலாம். ஒருவரின் எடை, எவ்வளவு நேரம் மாப் போடுகிறார்கள், எவ்வளவு வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்கிறார்கள் என்பதை பொறுத்து செலவிடப்படும் கலோரிகள் மாறலாம். 60 கிலோ எடையுள்ள ஒருவர் 1 மணி நேரம் மாப் போட்டால் 130-150 கலோரிகள் வரை எரிப்பார். அதே நேரத்தில் 75 கிலோ எடை கொண்டவர் எனில் 170-200 கலோரிகள் எரிப்பார். 90 கிலோ எடை கொண்டவர் எனில் 210-240 கலோரிகள் வரை செலவாகும். தினமும் 15-20 நிமிடம் மாப் போட்டால் அதனால் 30 முதல் 70 குறையும். இதனால் வீடும் சுத்தமாகும், எடையும் குறையும். மேல் மற்றும் கீழ் உடலுக்கு சிறந்த பயிற்சி.
பாத்திரம் கழுவுதல்
பாத்திங்களை கழுவி வைப்பது வீட்டை சுகாதாரமாக வைத்திருக்க உதவும். நீங்கள் தினமும் பாத்திரம் கழுவும் நபராக இருந்தால் அதை கொஞ்சம் வித்தியாசமாக செய்து பாருங்கள். பாத்திரங்களை கழுவிய பின் முறையாக அடுக்கி வையுங்கள். முழுமனதுடன் அந்த வேலையை செய்யுங்கள். இது எடையை அதிகரிக்கும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை கட்டுப்படுத்தும். இதனால் மனநிலை சீராகும். நீங்கள் அரைமணி நேரம் பாத்திரம் கழுவினால் கிட்டத்தட்ட 60 முதல் 80 கலோரிகள் வரை குறையும். கைகளுக்கு நல்ல பயிற்சி.
துணி துவைத்தல்
எடை குறைய நினைப்பவர்கள் துணிகளை வாஷிங் மிஷினில் போடாமல் கைகளால் துவைக்கலாம். இதனால் உடலுக்கு நல்ல பயிற்சி. நீங்கள் ஸ்குவாட் நிலையில் அமர்ந்து துணி துவைத்தால் கால்கள் வலுவாகும். கைகளுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும். இதனால் அரை மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 120–150 கலோரிகள் செலவாகும்.
துணியை காய போடுதல்
துணிகளை நன்கு பிழிந்து காய போடுவதால் கூட எடை குறையுமாம். ஏனெனில் ஒவ்வொரு துணியையும் முறுக்கி பிழிந்து துணிகளை காயப்போடுவதால் 15 நிமிடங்களுக்கு சுமார் 40–60 கலோரிகள் எரிக்கப்படும்.
மற்ற இடங்களைத் துடைத்தல்
வீட்டு தரையை மட்டுமின்றி சுவர்கள், பாத்ரூம் சுவர், மாடி மற்றும் வெளியிடங்கள், வீட்டின் முற்றம் ஆகியவற்றை சுத்தம் செய்வதும் நல்ல பயிற்சிதான். காலையில் எழுந்ததும் முற்றம் தெளித்து சுத்தப்படுத்தி கோலம் போடுவது கூட பயிற்சிதான். நீங்கள் அரை மணிநேரம் இந்த வேலைகளில் ஈடுபட்டால் 150–200 கலோரிகள் வரை குறையும்.
வாக்கிங்
அருகாமையில் உள்ள கடைக்கு செல்வது, கோயில் செல்வது போன்றவற்றிற்கு பைக் போன்றவை பயன்படுத்தாமல் நடந்தே செல்லலாம். சைக்கிள் பயன்படுத்தலாம். இப்படி தினசரி தேவைகளுக்காக 30 நிமிடங்கள் நடப்பது அல்லது சைக்கிள் ஓட்டுவது கீழ் உடலை வலிமையாக வைக்கவும், எடை குறைக்கவும் உதவும்.
தினமும் வீட்டு வேலைகளை முழுமையாக செய்து முடித்தால் கிட்டத்தட்ட 300 முதல் 400 கலோரிகளை எரிக்க முடியும். அனைத்து வேலைகளும் குனிந்து நிமிர்ந்து செய்யக் கூடிய வேலைகள் என்பதால் இயல்பாகவே உடல் நன்கு இயங்குகிறது. இதனுடன் நல்ல உணவுப்பழக்கம் கொண்டிருந்தால் எடை விரைவில் குறையும்.