- Home
- உடல்நலம்
- Weight Loss Tips : 50 வயசுல எடையை குறைக்க போறீங்களா? அப்ப கண்டிப்பா இந்த உணவுகளை சாப்பிடுங்க
Weight Loss Tips : 50 வயசுல எடையை குறைக்க போறீங்களா? அப்ப கண்டிப்பா இந்த உணவுகளை சாப்பிடுங்க
50 வயதில் எடையை குறைக்க விரும்புபவர்கள் சில உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தாலே விரைவாக எடையை குறைக்க முடியும். அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Weight Loss After 50
50 வயசு வந்தாலே கூடவே சில உடனல்ல பிரச்சினைகளும் வந்துவிடும். அதிலும் உடல் பருமனாக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் உடல் பருமன் தான் பல நோய்கள் உடலுக்குள் நுழைவதற்கான வாயிலாகும். எனவே முடிந்தவரை உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது தான் நல்லது.
சரி, இப்போது உங்களுக்கு 50 வயதாகி விட்டது, அதிகமாக இருக்கும் எடையை குறைக்க போராடுகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தாலே எடையை வேகமாக குறைக்க முடியும். அது எந்தெந்த உணவுகள் என்று இப்போது தெரிந்துகொள்ளலாம்.
பச்சை காய்கறிகள் :
50 வயதிற்கு பிறகு உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பச்சை காய்கறிகளை தங்களது உணவில் கீரைகள், முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் அவை உங்களது வயிறை முழுமையாக உணர வைக்கும். மேலும் எடையை குறைப்பது எளிதாக்கும்.
கொழுப்பு மீன்கள் :
சால்மன், டூனா போன்ற மீன்கள் உயர் புரதத்தின் ஆதாரமாகும். மேலும் இவை கலோரிகள் குறைவாக உள்ள கொழுப்பு நிறைந்த மீன்களாகும். இந்த மீன்களில் அதிக அளவு புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் அவை 50 வயதிற்கு பிறகும் தசையை பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
முட்டை :
முட்டையில் உள்ள கோலின் என்ற வைட்டமின் பி மூளை மற்றும் தசை செயல்பாடுகளுக்கு ரொம்பவே நல்லது. அதுவும் முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவி தான் இந்த கோலின் அதிகமாக உள்ளன. தசை செயல்பாடுகள் உடல் எடையை குறைக்க குறைக்க உதவும்.
பருப்பு வகைகள் :
50 வயதிற்கு பிறகு உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் இவை புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். புரதம் ஜீரணிக்க அதிக கலோரிகள் தேவை. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்படும் மற்றும் எடையும் குறைய வாய்ப்பும் அதிகரிக்கும்.
யோகர்ட் ;
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, யோகர்ட் காலை உணவுக்கு மிகவும் சிறந்த உணவாகும். ஏனெனில் ஒரு சிறிய கப் யோகர்ட்டில் 15-17 கிராம் புரதம் உள்ளன. வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க புரத முக்கிய பங்கு வகிக்கின்றன.
பார்லி :
பார்லியில் முழு தானிய உணவுகளில் ஒன்றாகும். இதில் புரதம், கரையக்கூடிய நார்ச்சத்து மிகுந்துள்ளன. இது கெட்ட கொழுப்பை குறைக்கும். மேலும் பசியை குறைத்து திருப்தி உணர்வை தரும். ரத்த சர்க்கரை அளவை குறைக்க பார்லி பெரிதும் உதவும். எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் அரை கப் பார்லியை சூப்பாக அல்லது சாலட்டாக சாப்பிடுங்கள்.