Weight Loss : உடற்பயிற்சி எடையை குறைக்காதா? உண்மையான காரணம் இதுதான் தெரியுமா?!
வெறும் உடற்பயிற்சி செய்வதால் மட்டும் எடை குறைவதில்லை. உடல் எடையைக் குறைக்க கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயத்தை இங்கு காணலாம்.

உடல் எடையை குறைக்க பலர் கடும் முயற்சி செய்வதை பார்த்திருப்போம். ஆனால் எவ்வளவு முயன்றாலும் எடை குறையவே குறையாது. ஏன் என்று எப்போதாவது யோசனை செய்துள்ளீர்களா? இவ்வளவு உடற்பயிற்சி செய்தும் வீணாகிவிட்டதே! அதற்கான பின்னணியை இங்கு காணலாம்.
உடற்பயிற்சி மட்டுமே நீண்ட கால எடை குறைப்பு உதவாது என ஆய்வுகள் காட்டுகின்றன. பொதுவாக உடற்பயிற்சிகள் உடல் பருமன் அதிகரிப்பதைத் தடுக்கத் தான் உதவும். நீங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றியிருந்தால் கொஞ்சம் எடை குறையும். அதை மேம்படுத்த உடற்பயிற்சி உதவும். விரும்பும் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு எடை குறைக்கலாம் என யாராவது சொன்னால் அது முற்றிலும் பொய்.
எடை குறைய மிக முக்கியம் உணவுமுறை தான். இதை மக்கள் கண்டு கொள்வதில்லை. தற்போது எல்லா உடல் பருமன் நிபுணர்களும், ஆய்வுகளும் சுட்டிக் காட்டுவது காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் அடங்கிய சத்தான, அளவான உணவுதான் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், எடையை குறைக்கவும் அவசியமானது.
கலோரி பற்றாக்குறையும் எடை குறைய உதவும் இன்னொரு காரணிதான். எடை இழப்பை தடுப்பது சர்க்கரை தான். இது எடையை அதிகரிக்கிறது. நீங்கள் நார்ச்சத்து, புரதம், குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கலந்த சரிவிகித உணவை எடுத்தும் கொள்வது சிறந்த உணவுப் பழக்கம் ஆகும்.
நீங்கள் வாக்கிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது மனநிலை மேம்பட உதவும். இதயத்திற்கும், புற்றுநோய் எதிர்ப்புக்கும், பல்வேறு நோய் தடுப்புக்கும் உடற்பயிற்சிகள் அவசியம். ஆனால் எடை குறைக்க வெறும் உடற்பயிற்சி உதவாது. உணவு பழக்கத்தை மாற்றுவதே எடை குறைக்க உதவும்.