- Home
- உடல்நலம்
- Weight Loss Drinks : உடல் எடையை ஹெல்தியா குறைக்கணுமா? அப்ப இந்த ட்ரிங்க்ஸ்ல ஒன்னு குடிங்க
Weight Loss Drinks : உடல் எடையை ஹெல்தியா குறைக்கணுமா? அப்ப இந்த ட்ரிங்க்ஸ்ல ஒன்னு குடிங்க
உடல் எடையை ஆரோக்கியமாக முறையில் குறைக்க நினைப்பவர்களுக்கான சில ஹெல்தி ட்ரிங்க்ஸ் பட்டியல் இங்கே பார்க்கலாம்.

Weight Loss Drinks at Home
இந்த காலத்துல உடல் எடை அதிகரிப்பால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிகரித்த உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க பலரும் பல விதமான பானங்கள் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நீங்களும் உங்களது எடை இழப்பு பயணத்தை வெற்றிகரமாக முடிக்க விரும்பினால் உங்களுக்கு உதவும் சில பானங்களின் பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீரகத் தண்ணீர் :
இதில் ஆன்டி-ஆக்ஸிபன்ட்ஸ் நிறைந்துள்ளது. சீரகம் வளர்ச்சிக்கு மாற்றத்தை அதிகரிக்க உதவும். தினமும் காலை வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் செரிமானம் மேம்படும் மற்றும் கொழுப்பை கரைக்கும்.
வெந்தய நீர்
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் இது வயிறை நீண்ட நேரம் நிரப்பி வைக்கும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தும், பசியை கட்டுப்படுத்தும். இதனால் எடையை சுலபமாக குறைத்து விடலாம் இதற்கு தினமும் இரவு தூங்கும் முன் சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து பிறகு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்து தண்ணீரை குடியுங்கள். விரும்பினால் வெந்தயத்தையும் கூட சாப்பிடுங்கள்.
ஓம வாட்டர்
ஓமம் செரிமானத்திற்கு உதவும் மற்றும் வயிற்று உப்புசத்தை தடுக்கும். ஓம நீரானது உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். பிறகு படிப்படியாக எடையை குறைக்க உதவும். எனவே தினமும் காலை எழுந்ததும் சூடான ஒரு கிளாஸ் ஒம தண்ணீர் குடியுங்கள்.
சப்ஜா விதைகள் :
சப்ஜா விதையில் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தும். மேலும் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும். எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் சப்ஜா விதைகள் ஊறவைத்த தண்ணீரை குடியுங்கள். இந்த நீரானது உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பது மட்டுமல்லாமல், வயிறு உப்புசத்தை குறைக்கவும் உதவும்.
வெண்டைக்காய் தண்ணீர் :
வெண்டைக்காய் நீரானது செரிமானத்தை மேம்படுத்தி, பசியை குறைக்கும் மற்றும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. கூடுதலாக இந்த நீரானது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவதை தடுக்கும். எனவே இரவில் தூங்கும் முன் வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடியுங்கள்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை தண்ணீர்
இந்த நீரானது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கும், வளர்ச்சி அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை எரிக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்து வந்தால் பித்த உற்பத்தியை மேம்படுத்தும், பசி குறைக்கும் மற்றும் உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றப்படும்.