- Home
- உடல்நலம்
- Weight Loss Mistakes : என்ன செய்தாலும் எடை குறையலயா? அப்ப நீங்க இந்த தவறை செய்றீங்கனு அர்த்தம்
Weight Loss Mistakes : என்ன செய்தாலும் எடை குறையலயா? அப்ப நீங்க இந்த தவறை செய்றீங்கனு அர்த்தம்
எடையை குறைக்க முயற்சிக்கும் போது சில தவறுகளை செய்தால் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். அந்த தவறுகள் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.

Common Weight Loss Mistakes
இந்த காலத்துல பலரும் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அவர்கள் எடையை குறைக்க பல்வேறு உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். இருந்தபோதிலும் எடை குறைந்தபாடில்லை. எடை இழப்பில் அவர்கள் செய்யும் சில தவறுகள் அவர்களது எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க தான் செய்கிறது. அத்தகத் அவர்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். ஒருவேளை நீங்கள் அவற்றை செய்கிறீர்கள் என்றால் இன்று நிறுத்தி விடுங்கள்.
தூக்கத்தை புறக்கணிப்பது
தூக்கமின்மையும் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். அதாவது சோர்வாக இருக்கும் போது மன அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதனால் பசியும் மற்றும் குப்பை உணவுக்கான ஏயக்கம் அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில், நீங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சியில் சரியாக இருந்தாலும் மோசமான தூக்கம் உங்களது எடை இழப்பின் பயணத்தை அழித்துவிடும். எனவே, இரவு உணவுக்குப் பிறகு உடனே தூங்காமல் சிறிது நேரம் நடக்கவும். அது போல வழக்கமான தூக்க அட்டவணையை பின்பற்றுங்கள். நீங்கள் நன்றாக தூங்கினால் உங்களது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
காலை உணவை தவிர்த்தல்:
காலை உணவை தவிர்ப்பது எடையை குறைக்க உதவும் என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். ஆனால் அது தவறு. நீங்கள் காலை சாப்பிடாமல் வெறும் டீ, காபி மட்டும் குடித்தால் உங்களது உடலில் வளர்ச்சிதை மாற்றம் மெதுவாகும். இதனால் உடலில் ரத்த சர்க்கரை குறைய தொடங்கும். 11 மணிக்குள் உங்களுக்கு பசி எடுத்து விடும். மேலும் மதியம் அதிகமாக சாப்பிட தூண்டும். சர்க்கரை உணவுகளை அதிகமாக சாப்பிட விரும்புவீர்கள். இதனால் உங்களது எடை இழப்பின் பயணம் பாதிக்கப்படும்.
ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிடுதல்!
எடை இழப்பின் பயணத்தில் நீங்கள் ஆரோக்கியமானதாக என்னும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல. நீங்கள் அதை அதிகமாக சாப்பிட ஆரம்பித்தால் அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஏனெனில் ஆரோக்கியமானதாக கூறப்படும் பொருட்களில் கூட மறைக்கப்பட்ட சர்க்கரை அல்லது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் நிறைந்திருக்கும். உதாரணமாக, ஒரு கைப்பிடி பாதாமில் கலோரிகள் இருந்தாலும், அது ஆரோக்கியமானது என்பதற்காக நீங்கள் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டிய தேவையில்லை.
அதிக கலோரிகள் :
நாம் அடிக்கடி நம்மை அறியாமலேயே நிறைய கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். அதாவது ஒரு கப் டீ , ஒரு லட்டு சாக்லேட் பார் போன்ற உணவுகளை ஒன்னு தானே சாப்பிடுகிறேன், இவை எடை அதிகரிக்காது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தவறு ஏனெனில் ஒரு நாளைக்கு 200 கூடுதல் கலோரிகள் என்றால் ஒரு மாதத்திற்கு இரண்டு பவுண்டுகள் ஆகும். எனவே இவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்.