Almond: பாதாம் தோல் நீக்க வேண்டுமா? நீக்கக் கூடாதா?
பாதாமை தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டுமா? அல்லது ஊற வைத்து தோல் நீக்கி சாப்பிட வேண்டுமா? எது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Almonds With Skin or Without Skin
Almonds With Skin or Without Skin : காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது நம்முடைய மூளை ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் அதிகரிப்பதற்கான திறவுகோல் என்று சொல்லப்படுகிறது. பாதாம் உலர் பழங்களில் ஒன்றாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பது முதல் சருமத்தை பளபளப்பாக வைப்பது வரை பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது.
Almond Skin
பாதாம் தோல் நீக்க வேண்டுமா?
ஆனால், பாதாம் எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து நம்மில் பலருக்கு அடிக்கடி குழப்பம் ஏற்படும். அதாவது பாதாம் தோலுடன் சாப்பிட வேண்டுமா? அல்லது ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிட வேண்டுமா? சரி இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? பாதாம் எப்படி சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Should we remove the skin of Badam
பாதாமை தோலுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- தோலுடன் இருக்கும் பாதாமில் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. எனவே தோலுடன் பாதாமை சாப்பிட்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
- மேலும் தோலுடன் இருக்கும் பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதேவேளையில் ஆக்சிஜனேற்ற சேதத்தை எதிர்த்து போராட உதவும்.
- பாதாமில் இருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும் மற்றும் நீடித்த ஆற்றலுக்கான ஒரு சிறந்த தேர்வாக அமையும்.
- தோலுடன் இருக்கும் பாதாம் சாப்பிட்டால் உங்களது வயிற்றை நீண்ட நேரம் முழுமையாக வைக்க உதவும் மற்றும் செரிமானத்தை ஆதரிக்கும்.
இதையும் படிங்க: குழந்தைகளின் எடையை அதிகரிக்க பாதாம் எப்படி கொடுக்கலாம்?
Benefits of removing Almond Skin
தோல் இல்லாமல் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- பாதாமை ஊற வைத்து அதன் தோலை உரித்து சாப்பிட்டால் வயிற்றுக்கு மென்மையாகவும், ஜீரணிக்க மிக எளிதாகவும் இருக்கும்.
- ஊற வைத்து தோல் உரிக்கப்பட்ட பாதாம் ஊட்டச்சத்து உறிஞ்சுகளை அதிகரிக்க செய்யும் மற்றும் செரிமானத்திற்கு பெரிதும் உதவும்.
- ஊற வைத்து தோல் நீக்கப்பட்ட பாதாம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும், இதய நோய்களை தடுக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: பாதாம் சாப்பிட்டால் இந்த '6' உணவுகளை தவிருங்க.. மீறினா உடல்நல பிரச்சனை வரும்!
Almonds With Skin or Without Skin which is better
தோலுடன் இருக்கும் பாதாம் அல்லது தோல் நீக்கிய பாதாம்: எது நல்லது?
பாதாமை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் அது தனிப்பட்ட நபரின் விருப்பத்தேர்வு. நீங்கள் தோலுடன் இருக்கும் பாதாமை சாப்பிட்டால் சரி அல்லது ஊற வைத்து தோல் நீக்கி பாதாமை சாப்பிட்டாலும் சரி. இவை இரண்டும் உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். முக்கியமாக உங்களது சிற்றுண்டி பசியை பூர்த்தி செய்யும்.