Hyperthyroidism : தைராய்டு எடையை குறைக்கவிடலயா? இந்த '3' டயட் டிப்ஸ் பாலோ பண்ணுங்க
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க சுலபமாக குறைக்க உதவும் சிம்பிளான டயட் முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Weight Loss Diet Tips for Hyperthyroidism
உடலில் போதுமான தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய தவறிய ஒரு நிலை தான் ஹைப்பர் தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. இது ஹார்மோன் வளர்சிதை மாற்ற விகிதத்தை நிர்வகிக்கும் தன்மையை கொண்டது. மேலும் உடல் எடையை அதிகரிக்கவும் செய்யும். ஆனால், இந்த பிரச்சனை உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு சில டயட் முறைகளை பின்பற்ற வேண்டும். இந்த பதிவில் ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எடையை குறைக்க எந்த மாதிரியான உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.
ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள் :
அதிகப்படியான பசி, படபடப்பு, நரம்புத் தளர்ச்சி, முடி உதிர்தல், வீங்கிய முகம், தசை பலவீனம், இரத்தத்தில் அதிகப்படியான கொலஸ்ட்ரால், அதிக கவலை போன்ற அறிகுறிகள் இருந்தால் அசால்டாக இருக்காதீர்கள். அது ஹைப்பர் தைராய்டு அறிகுறியாகும்.
இவற்றை சாப்பிட கூடாது :
ஹைபர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரை மற்றும் எளிதில் உடையக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை முதலில் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்க செய்யும். இதற்கு பதிலாக குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.
அலர்ஜி எதிர்ப்பு உணவுகள் :
ஹைபர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் அதிக அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இவை மூட்டு வலி, மனசோர்வை குறைக்க உதவுகிறது. இது தவிர நோய் எதிர்ப்பு அமைப்பு சீராக செயல்படவும், உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை அதிகரிக்க செய்யவும் உதவும்.
உணவை பிரித்து சாப்பிடுங்கள் :
ஹைபர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு அடிக்கடி அஜீரண கோளாறு ஏற்படும். எனவே, ஒரு நாளைக்கு மூன்று வேலை உணவு எடுத்துக் கொள்வதற்கு பதிலாக அதை 5-6 வெளியாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடவும். இப்படி சாப்பிடுவதன் மூலம் செரிமான அமைப்பின் செயல்பாடு மேம்படுவது மட்டுமல்லாமல், உடல் எடையையும் கட்டுப்படுத்த முடியும்.