Thyroid : உஷார்! தைராய்டு இருக்குறவங்க இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது! மோசமான விளைவு
Worst Foods For Thyroid : தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடவே கூடாது சில உணவுகளின் பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Worst Foods For Thyroid
மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறையால் பலரும் பலவிதமான உடல்நல பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். அந்த வகையில் தற்போது தைராய்டும் எந்தவொரு சிகிச்சையும் இல்லாத ஒரு பொதுவான நோயாக மாறியுள்ளது. இந்த பிரச்சினை உள்ளவர்கள் தங்களது உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் சில உணவுகள் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்றாலும், சில உணவுகள் தீங்கை விளைவிக்கும். எனவே தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து இப்போது இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
காபி
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ காபி குடிக்கவே கூடாது. மேலும் தைராய்டு மருந்து எடுத்துக் கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அல்லது பின்பு தான் காபி குடிக்க வேண்டும். அதற்கு முன் காபி குடித்தால் பிரச்சனை மோசமாகிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சோயா
தைராய்டு உள்ளவர்கள் சோயா உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சோயாவில் இருக்கும் சில சேர்மங்கள் தைராய்டில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அதாவது அதிகப்படியான சோயா நுகர்வானது தைராய்டு மருந்துகளை உறிஞ்சும் திறனில் தலையிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சர்க்கரை உணவுகள்
கேக், சாக்லேட் போன்ற சர்க்கரை நிறைந்த உணவுகளை தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஹைபோ தைராய்டு உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். அதுமட்டுமல்லாமல் எடையையும் அதிகரிக்க செய்யும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள்
இறைச்சி, வெண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு ஹார்மோன் மற்றும் தைராய்டு மருந்துகளை உறிஞ்சும் திறனை சீர்குழைத்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் நிறைய இருப்பதால் ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. மேலும் இது உயர் இரத்த அழுத்தத்திற்கான அபாயத்தையும் அதிகரிக்க செய்யும்.
பருப்பு வகைகள்
தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு நார்ச்சத்து நல்லது என்றாலும் அதை அதிகமாக எடுத்துக் கொண்டால் பிரச்சினையாகிடும். பீன்ஸ், பருப்பு வகைகள், முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் அதில் இருக்கும் நார்ச்சத்து தைராய்டு ஹார்மோன் மாற்று மருந்துகள் உறிஞ்சுவதில் தலையிடும்.