- Home
- Lifestyle
- Thyroid Problem: தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம்..சரி செய்ய சூப்பர் உணவு இருக்கு..
Thyroid Problem: தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம்..சரி செய்ய சூப்பர் உணவு இருக்கு..
Thyroid Problem: தைராய்டு பிரச்சனையை சில எளிய உணவு வழிமுறைகளை பயன்படுத்தி எப்படி குறைப்பது, என்பதை இந்த பதிவின் மூலம் பார்த்து தெரிந்து வைத்து கொள்வோம்.

Thyroid:
இன்றைய நவீன காலகட்டத்தில், சர்க்கரை வியாதி, உடல் எடை அதிகரிப்பு போன்றவை உலகளாவிய பிரச்சனைகளாக மாறியுள்ளது. அந்த பட்டியலில் தற்போது, தைராய்டு பிரச்சனையும் இணைந்துள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக மேற்கத்திய உணவு முறை, உடல் உழைப்பு இல்லாமை, போன்றவைஅமைந்துள்ளது. உடலில் அயோடின் இல்லாததால் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் உடலில் பல பிரச்சனைகள் எழ ஆரம்பிக்கின்றன. .
Thyroid:
தைராய்டு நோயின் ஆரம்ப அறிகுறிகள்:
உடலில் சோர்வு, முடி உதிர்தல், பெண்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வராமல் இருப்பது, சோர்வான, அமைதியற்ற மனநிலை போன்றவை தைராய்டு நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். இந்த நோய்க்கான அறிகுறிகளை உடனுக்குடன் பரிசோதித்து, மருத்துவமனை சென்று உரிய சிகிக்சை மேற்கொள்வது அவசியம். இருப்பினும், அவற்றை கட்டுப்படுத்த சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Thyroid:
தைராய்டு என்றால் என்ன..?
தைராய்டு உறுப்பு நமது கழுத்துக்கு முன்னால் உள்ளது. இது பட்டாம்பூச்சி வடிவத்தினை கொண்டுள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. நாம் எதை சாப்பிட்டாலும், இந்த சுரப்பி அதை ஆற்றலாக மாற்றுகிறது. இதனுடன், இதயம், தசைகள், எலும்புகள் மற்றும் கொலஸ்ட்ராலையும் பாதிக்கிறது.தைராய்டு பிரச்சனைக்கு மன அழுத்தம், வைட்டமின் ஏ குறைபாடு, உடலில் அயோடின் குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பல காரணங்கள் உள்ளன. வீட்டிலேயே தைராய்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய்:
தினமும் உணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் காய்கறிகளை சமைக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தைராய்டு சுரப்பியால் சிலருக்கு கை, கால்கள் குளிர்ச்சியாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் நிவாரணம் கிடைக்கும்.
ஆப்பிள் வினிகர்:
பழங்களில், தைரய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆப்பிள் வினிகர் பயனுள்ளதாக இருக்கும். தினமும் உணவில் ஒரு மூடி ஆப்பிள் வினிகர்சேர்த்து கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தப்படும் என்பதோடு, தைராய்டு சுரப்பியும் சரியாக வேலை செய்யும்.
மஞ்சளை உட்கொள்ளவும்:
மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள், தைராய்டை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பாலுடன் மஞ்சளைப் பயன்படுத்தினால், தைராய்டு கட்டுக்குள் வரும். மேலும், ஆரஞ்சு மற்றும் அன்னாசி போன்ற பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
செலிமினியம் உணவுகள்:
செலிமினியம் குறைபாடு தைராய்டு பிரச்சனைக்கு முக்கிய காரணம். எனவே, செலிமினியம் அதிகம் கொண்ட காளான், பூண்டு உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்வது அவசியம். பசலை கீரையில் உள்ள வைட்டமின்கள், புரோடீன்கள் தைரய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு உகந்தது.
அசைவம் சாப்பிடுங்கள்:
உங்கள் உடலில் தைராய்டு அதிகரித்துக் கொண்டிருந்தால், உடனடியாக உணவில் கவனம் செலுத்துங்கள். உணவில் இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளை உட்கொள்வதன் மூலம் தைராய்டு கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏனெனில், உணவில் செய்யப்படும் சில மாற்றங்களால் தைராய்டை கட்டுக்குள் கொண்டு வரலாம்.