- Home
- உடல்நலம்
- Cold and Cough : இரவில் சளி, இருமலால் சரியா தூங்க முடியலயா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க
Cold and Cough : இரவில் சளி, இருமலால் சரியா தூங்க முடியலயா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க
இரவு தூங்க முடியாமல் சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சில இயற்கை பொருட்களை வைத்து இந்த பிரச்சினையை சரி செய்துவிடலாம்.

Home Remedies for Cold and Cough
மழைக்காலம் வந்தாலே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகளை அனுபவிப்பர். அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும். இதனால் இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் தவிப்பவர்கள் பலரும் உண்டு. ஆனால் வீட்டில் கிடைக்கும் சில இயற்கை பொருட்களை வைத்து இந்த பிரச்சனையை விரைவில் சரி செய்து விடலாம். அவை என்னென்ன என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள் :
மஞ்சளில் குர்குமின் என்னும் வலுவான அலர்ஜி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி பண்புகள் என்ற சேர்மம் இருக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதற்கு தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி குடித்து வரவும். இது தவிர தினமும் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலந்து குடித்து வந்தால் சளி, இருமல், தொண்டை வலி பிரச்சனை குறையும் என்கிறது ஆய்வுகள்.
இஞ்சி :
இஞ்சியில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் சளி, இருமலை குறைக்க பெரிதும் உதவுகிறது. கொதிக்கும் தண்ணீரில் ஒரு சின்ன இஞ்சித்துண்டை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டை வலி இருமல் குறையும். அதுமட்டுமல்லாமல் துளசி இலையுடன் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து கஷாயம் போல குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கருப்பு மிளகு :
சளி, இருமல், சுவாச குழாய் போன்ற பிரச்சனைகளுக்கு மிளகு சிறந்த தேர்வாகும். ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் இடித்து நன்கு கொதிக்க வைத்து பிறகு குடித்து வந்தால் நெஞ்சில் தேங்கியிருக்கும் சளி நீங்கும். இது தவிர ஒரு சிட்டிகை மிளகுத்தூளுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமலிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் ல். அதுபோல உணவில் மிளகு சேர்த்து வந்தால் ஆஸ்துமா, மூக்கடைப்பு, சைனஸ் ஆகியவை குணமடையும். புற்றுநோய், இதய நோய், கல்லீரல் நோய்களின் அபாயத்தையும் இது குறைக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றன.
துளசி :
சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பல நூற்றாண்டுகளாக துளசி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை இருமல் மற்றும் சளியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். இதற்கு 2 கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு துளசி இலைகளை சேர்த்து நன்கு 1 கிளாஸ் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி குடிக்கவும். அதுபோல தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
ஓமம் :
ஓமத்தில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் சளி, இருமல், தொண்டை புண் ஆகியவற்றை சரி செய்ய உதவுவதாக கூறப்படுகிறது. மேலும் ஓமத்தில் இருக்கும் தைமால் என்னும் சேர்மம் நெஞ்சு சளியை நீக்கி நாசிப் பாதையை சுத்தப்படுத்த பெரிதும் உதவுகிறது.