- Home
- உடல்நலம்
- Cold and Cough Diet : சளி, இருமல் இருந்தா இந்த பழங்களை சாப்பிடாதீங்க! மீறினால் இருமல் பாடாய்படுத்திடும்
Cold and Cough Diet : சளி, இருமல் இருந்தா இந்த பழங்களை சாப்பிடாதீங்க! மீறினால் இருமல் பாடாய்படுத்திடும்
சளி மற்றும் இருமலின் போது சாப்பிடக்கூடாத சில உணவுகள் மற்றும் பழங்களின் பட்டியல் இங்கே பார்க்கலாம்.

What Not to Eat During Cold and Cough
பழங்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. அவற்றில் நிறைய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். ஆனால் சளி மற்றும் இருமலின் போது சில வகையான பழங்கள் மற்றும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சாப்பிட கூடாத பழங்கள் :
ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்துள்ளன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தாலும் சளி இருமலின் போது இந்த பழங்களை சாப்பிடுவது நல்லதல்ல. மேலும் இந்த பழங்களில் அமிலத்தன்மையும் அதிகமாகவே உள்ளதால், இவை தொண்டை புண் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். பழங்கள் சாப்பிட விரும்பினால் வாழைப்பழம் அல்லது வேகவைத்த ஆப்பிள் சாப்பிடலாம்.
சாப்பிடக்கூடாத உணவுகள் :
1. இனிப்புகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் :
சளி மற்றும் இருமலின் போது இனிப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல் வீக்கத்தை ஏற்படுத்தும், சளி உற்பத்தியை மேலும் அதிகரிக்கும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இந்த உணவுகள் வெறும் கலோரிகளை மட்டுமே அதிகப்படுத்தும். எனவே சளி, இருமலின் போது இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
2. காரமான உணவுகள் :
காரமான உணவுகளை சளி, இருமலின் போது சாப்பிட்டால் நாசிப் பாதையில் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் தொண்டை புண்ணை அதிகமாக்கும். இருமல் மோசமாகும். அது மட்டுமல்லாமல் வீக்கம் மற்றும் அசெளகரியத்தை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றிற்கு பதிலாக லேசான காரத்துடன் இருக்கக்கூடிய அல்லது காரமில்லாத உணவுகளை சாப்பிடுவது நல்லது.
3. பொரித்த உணவுகள்:
சிக்கன், வடை, போண்டா, பஜ்ஜி போன்ற பொறித்த உணவுகளை சளி, இருமலின் போது சாப்பிட்ட கூடாது. அவை ஜீரணிக்க ரொம்பவே கடினமாக இருக்கும். மேலும் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் உடலை மிகவும் பலவீனப்படுத்தும். ஆகவே, இவற்றிற்கு பதிலாக வேக வைத்த காய்கறிகள் முழு தானியங்கள் மெலிந்த புரதங்கள் உண்பது நல்லது. இவற்றில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன மற்றும் ஜீரணிக்க எளிதாகவும் இருக்கும்.
4. பால் பொருட்கள்:
பால், ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை சளி, இருமலின் போது சாப்பிட்டால் பிரச்சினையை மேலும் அதிகப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே அதற்கு பதிலாக பாதாம் ,ஓட்ஸ் போன்ற பால் சேர்க்காததை எடுத்துக் கொள்ளுங்கள்.
5. பாக்கெட் உணவுகள் :
சிப்ஸ் போன்ற பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், சளி, இருமலின் போது அதை சாப்பிட்டால் தொண்டை வலியை அதிகரிக்க செய்யும். எனவே அவற்றிற்கு பதிலாக ஸ்மூத்திஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
6. காஃபின்
காஃபின், மது எனர்ஜி பானங்கள் போன்றவற்றை சளி, இருமலின் போது குடித்தால் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மற்றும் தூக்கத்தை சீர்குலைக்கும். அதற்கு பதிலாக சூடான நீர், மூலிகை தேநீர், சூப்புகள் போன்றவற்றை சாப்பிடலாம்.