சுட்டெரிக்கும் வெயிலில் கூட உடலை சுறுசுறுப்பாக வைக்கும் உப்பு மற்றும் சர்க்கரை நீர்!
கோடை வெயிலில் உடலை புத்துணர்ச்சியாக உதவும் உப்பு மற்றும் சர்க்கரை நீர். அது எப்படி உதவுகிறது என்று இங்கு காணலாம்.

Benefits of Salt and Sugar Water During Summer : கோடை காலம் வந்தாச்சு. வெயில் நம்மை வாட்டி வதைக்க ஆரம்பித்து விடும். எனவே இந்த நேரத்தில் உடலை நீரேற்றமாக வைப்பது ரொம்பவே முக்கியம். இதற்கு நீங்கள் வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் போதாது. ஏனெனில் இந்த சீசனில் வெப்பத்தின் காரணமாக உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். இதனால் உடலில் நீர் மட்டுமல்ல, அத்தியாவசிய தாது உப்புகளும் வெளியேறும். எனவே இந்த சமயத்தில் நீங்கள் சாதாரண நீருக்கு பதிலாக ஒரு எளிய பானம் குடிக்க வேண்டும். அதன் மூலம் உங்களது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும். அது வேற ஏதுமில்லை உப்பு மற்றும் சர்க்கரை நீர் தான்.
உப்பு மற்றும் சர்க்கரை நீர்:
vகோடையில் உப்பு மற்றும் சர்க்கரை நீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும். குறிப்பாக கோடை வெப்பத்தால் வியர்வை மூலம் வெளியேறும் எலக்ட்ரோலைட்டுகள் மீண்டும் உடலுக்கு கிடைக்க உதவும். பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நமது உடலை சமநிலையாக பராமரிக்க ரொம்பவே முக்கியம். உடலில் இவை குறைந்துவிட்டால் தசைப்பிடிப்பு, சோர்வு, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். முக்கியமாக இவை விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் செயல்பாடு அதிகம் செய்பவர்களுக்கு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் அவர்களுக்கு தான் அதிகம் வியர்ப்பதால் அவர்களது உடலிலிருந்து எலக்ட்ரோலைட் வியர்வை மூலம் வெளியேறும்.
இதையும் படிங்க: கொளுத்தும் கோடை வெயில்; உடல் சூட்டை தணிக்க குடிக்க வேண்டிய '5' பானங்கள்
உப்பு மற்றும் சர்க்கரை நீர் நன்மைகள்:
கோடை வெயிலால் உடலில் இருந்து சோடியம் பற்றாக்குறை ஏற்பட்டால் தசை பிடிப்பு ஏற்படும். எனவே இதற்கு உப்பு கலந்து நீர் குடிக்கலாம். இது தசைப்பிடிப்பை குறைக்கவும், உடலில் ஆற்றல் மட்டத்தையும் பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் சர்க்கரையானது உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்கும். உடலின் சமநிலையை பராமரிக்க உதவும். இந்த பானம் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் உடல் சோர்வு உணர்பவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: அடிக்கும் வெயிலிலும் துரத்தும் சளி பிரச்சினை; விரட்டியடிக்கும் '5' வீட்டு வைத்தியங்கள்!
யாரெல்லாம் குடிக்க கூடாது?
உப்பு மற்றும் சர்க்கரை நீர் எல்லாருக்கும் நல்லதல்ல. குறிப்பாக உயரத்தை அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் இந்த நீரை குடிக்க வேண்டாம். ஏனெனில் அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்க செய்யும். அது மட்டுமல்லாமல் உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள் மற்றும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களும் இந்த பானத்தை அதிகமாக குடிக்க வேண்டாம்.
குறிப்பு : கோடை காலத்தில் உப்பு மற்றும் சர்க்கரை பானம் பரப்பிரசதமாக இருந்தாலும் இதை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.