இலவங்கப்பட்டையுடன் இந்த 1 பொருள் கலந்து குடித்தால்... நெஞ்சு சளியை வெளியே வந்துரும்!!
நெஞ்சு சளியை நிரந்தரமாக விரட்டியடிக்க இலவங்கப்பட்டை மற்றும் தேனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Natural Remedies For Cold
காலம் காலமாகவே தேன் மற்றும் இலவங்கப்பட்டை சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற அறிகுறிகளை குறைப்பதற்காக இயற்கையான மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தேனில் இருக்கும் பண்புகள் இருமல் மற்றும் தொண்டை புண்ணை குறைக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் இருக்கும் சேர்மங்களானது சளியை குறைக்கும் மற்றும் சுவாச பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
Home Remedies For Cold And Cough
அதுபோல இலவங்கப்பட்டை மற்றும் தேனில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. அவை வைரஸ் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல் காய்ச்சல் அறிகுறிகளை குறைக்கும், உடலை நீரேற்றமாக வைக்கும். இந்த காரணத்திற்காக தான் இலவங்கப்பட்டை மற்றும் தேன் பிரபலமான வீட்டு வைத்தியமாக உள்ளன.
சளியை குணமாக தேன் மற்றும் இலவங்கப்பட்டையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? :
1 ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியுடன், 1/4 ஸ்பூன் தேன் கலந்து சூடான நீர் அல்லது மூலிகை தேநீர் கலந்து பானமாக குடிக்கலாம். இந்த பானமானது சளி பிரச்சினையை குணமாக்கும் மற்றும் தொண்டை எரிச்சலை ஆற்றும். தினமும் இரவு சாப்பிட்ட பிறகு அல்லது தூங்குவதற்கு முன் இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நினைவில் கொள் :
- தேன் மற்றும் இலவங்கப்பட்டை இவை இரண்டையும் மிதமான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- முக்கியமாக இலவங்கப்பட்டை சிறிய அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் கல்லீரல் மற்றும் இரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- கர்ப்பிணிகள் இந்த பானத்தை குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.