மலச்சிக்கலால் சிரமமா? தினமும் இந்த பழத்தை '1' சாப்பிட்டால் நிவாரணம்
Bananas For Constipation Relief : நாள்பட்ட மலச்சிக்கலை குணப்படுத்த மற்றும் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க என்ன பழம் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இங்கு காணலாம்.

மலச்சிக்கலால் சிரமமா? தினமும் இந்த பழத்தை '1' சாப்பிட்டால் நிவாரணம்
இன்றைய காலகட்டத்தில் மலச்சிக்கல் ஒரு பொதுவான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பிரச்சனையாகும். அனைத்து வயதினரும் மலச்சிக்களால் அவதிப்படுகிறார்கள். உண்மையில், நேரமின்மை மற்றும் பெரும்பாலான நேரத்தை வீட்டிற்கு வெளியே நாம் செலவிடுவதால் வெளிப்புறங்களில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற உணவை அதிகமாக சாப்பிடுகிறோம். இதனால் செரிமான செயல்பாட்டில் நேரடி தாக்கம் ஏற்படுகிறது. மேலும் இந்த இத்தகைய உணவானது விரைவாக ஜீரணமாகாது. இதன் காரணமாக தான் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகின்றது.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் எப்போதும் வயிற்று வலி, பிடிப்புகள், வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள். இது தவிர நீண்ட கால மலச்சிக்கல் மூலநோய், புண்கள் மற்றும் பிளவுகள் உள்ளிட்ட பல கடுமையான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், மலச்சிக்கல் பிரச்சனையை சரியான நேரத்தில் சரி செய்வது ரொம்பவே முக்கியம்.
மலச்சிக்கல்
அதே சமயம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற பல வகையான மருந்துகளும் கிடைக்கின்றன. ஆனால், அதற்கு பதிலாக நீங்கள் வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். ஆம், மலச்சிக்கல் பிரச்சினையை போக்க வாழைப்பழம் பெரிதும் உதவும். உண்மையில் வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, மெக்னீசியம், மாங்கசீசு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 உள்ளன. அவை செரிமான பிரச்சனையை நீக்கி, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. எனவே, மலச்சிக்கல் பிரச்சினையில் வாழைப்பழத்தில் எவ்வாறு நன்மை பயக்கும் என்று இப்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க: மலச்சிக்கல் பிர்ச்சனையா? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க! தீர்வு கிடைக்கும்!
வாழைப்பழம் மலச்சிக்கலை எவ்வாறு குணப்படுத்தும்?
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால், இது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களை உருவாக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் வயிற்றுப் பிரச்சினைகளை சரிசெய்யும். இதனால் குடல் இயக்கத்தின் போது ஏற்படும் அசெளகரியத்தை நீக்கும் மற்றும் வயிற்றை சுத்தம் செய்யும். மேலும் வாழைப்பழம் செரிமான அமைப்பை ஆரோக்கியமா வைக்க உதவும். எனவே, தினமும் காலை 1 வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: மலச் சிக்கல் பெரும் சிக்கல்...ஈஸியா சரி செய்ய இதோ வழி இருக்கு
மலச்சிக்கலுக்கு எந்த வாழைப்பழம் நல்லது?
மலச்சிக்கலுக்கு பழுத்த வாழைப்பழம் தான் நல்லது. மேலும் மஞ்சள் வாழைப்பழம் ஜீரணிக்க எளிதாக இருக்கும். முக்கியமாக, பழுத்த வாழைப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து நிவாரணம் அளிக்கும். கூடுதலாக, குடல் தொடர்பான பிரச்சினையும் குறையும்.