Lemon Water vs Honey Water : எடை இழப்புக்கு எது சிறந்த பலன்களைத் தரும் தெரியுமா?
எலுமிச்சை நீர் அல்லது தேன் கலந்த நீர் இவை இரண்டில் எது எடை இழப்பு சிறந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Weight Loss Tips
தற்போது பெரும்பாலானோர் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எந்தவித கஷ்டமும் இல்லாமல் எடையை குறைக்க இயற்கையான குறிபாக மிகவும் பிரபலமான இரண்டு வழிகள் உள்ளன. அதுவேற ஏதும் இல்லைங்க தேன் கலந்த நீர் மற்றும் எலுமிச்சை நீர். இவை இரண்டும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக சொல்லப்படுகின்றது. ஆனால் விரைவான எடை இழப்புக்கு இவை இரண்டில் எது ரொம்ப பெஸ்ட் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேன் கலந்த நீர் நன்மைகள் :
1. தேனில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு உடனடி சக்தியை வழங்கும்.
2. ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் வயிற்றை அமைதிப்படுத்தும் மற்றும் மென்மையான செரிமானத்தை ஊக்குவிக்கும்.
3. தேனில் இருக்கும் பண்புகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும்.
4. தேனில் இயற்கையாகவே பாக்டரிய எதிர்ப்பு மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளதால் அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். மேலும் பருவ கால தொற்று நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம்.
5. தேன் நீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் எடை இழப்புக்கு மறைமுகமாக உதவும்.
குறிப்பு : சர்க்கரை நோயாளிகள் அல்லது சர்க்கரை நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் இந்த தேன் கலந்த நீரை குடிக்கக்கூடாது. அதுபோல தேனில் சர்க்கரை உள்ளதால் இது அதிகமாக எடுத்துக் கொண்டால் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
லெமன் வாட்டர் நன்மைகள் :
1. எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தில் கொலோஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
2. எலுமிச்சை தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்தி, வீக்கத்தை குறைக்க உதவும்.
3. எலுமிச்சை நீர் உடலை நீரேற்றமாக வைக்கவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
4. எலுமிச்சையில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.
குறிப்பு : தினமும் எழுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் பற்களின் எனாமல் தேய்மானம் அடையும். எனவே கவனத்துடன் இருங்கள்.
எது பெஸ்ட்?
லெமன் வாட்டர் மற்றும் தேன் தண்ணீர் இவை இரண்டுமே எடை இழப்புக்கு நேரடியாக உதவுவதில்லை. ஆனால், ஆரோக்கியமான உணவு மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் சேர்த்து இந்த பானங்களை குடிப்பது நல்லது. மேலும் இவை இரண்டும் தனித்துவமான நன்மைகளை கொண்டுள்ளதால் உங்களது உடல்நிலை மற்றும் இலக்குகளை பொறுத்து இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். இல்லையெனில் மாறி மாறி குடிப்பது அல்லது இரண்டையும் சேர்த்து கூட உட்கொள்ளலாம்.