MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • முட்டையை இப்படி சாப்பிட்டால் விஷத்திற்கு சமம்... எச்சரிக்கும் நிபுணர்கள்

முட்டையை இப்படி சாப்பிட்டால் விஷத்திற்கு சமம்... எச்சரிக்கும் நிபுணர்கள்

முட்டையில் புரதச்சத்து மிகுந்து காணப்பட்டாலும், அதில் சில ஆபத்தான விஷயங்களும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

2 Min read
Author : maria pani
| Updated : Jan 24 2023, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

முட்டையில் புரதம் மாதிரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவது உங்களுக்கு தெரியும். இதனை சாப்பிட்டு வந்தால் தசைகள், எலும்புகளுக்கு பலம் கிடைக்கும். ஆனால் முட்டை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆரோக்கியமான உணவு அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா? சிலர் இதை உட்கொள்வதால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 

முட்டையில் சத்துக்கள்.. 

முட்டை சுவையாகவும், எளிதாகவும் சமைக்கக்கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முட்டையை எளிதில் சாப்பிடலாம். இதில், 6.3 கிராம் புரதம், 69 மில்லிகிராம் பொட்டாசியம், வைட்டமின் ஏ - 5.4%, கால்சியம் - 2.2% , இரும்புச்சத்து - 4.9% உள்ளது. இருப்பினும் முட்டை சிலரது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இதை யார் சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

தினமும் முட்டை சாப்பிடுவதால் எலும்புகளும், தசைகளும் வலுப்படுத்தப்படும். அத்துடன் மூளை கூர்மையாவதோடு, புற்றுநோயை எதிர்ப்பாற்றல் கிடைக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. பல நன்மைகள் இருந்தபோதிலும், முட்டைகள் சிலருக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பல கடுமையான நோய்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும், இதை எப்படி அறிவது என காணலாம்.  

36

இதய நோயாளிகள் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உலக இதய சம்மேளனத்தின் படி, அதிக கொலஸ்ட்ரால் பக்கவாதம், இதய நோய் ஆபத்தை அதிகரிக்கிறது. இதய நோயாளிகள் முட்டை உண்பதால் வருடந்தோறும் உலகளவில் 4.4 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுத்துகின்றன. முட்டையின் மஞ்சள் கருவை உண்பதால் தமனிகளில் அடைப்பு உருவாகலாம்.  

கொலஸ்ட்ரால் இருக்கா? எச்சரிக்கை! 

கொலஸ்ட்ரால் நோயாளிகள் முட்டை சாப்பிடக்கூடாது. முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் உள்ளது. என்சிபிஐ (NCBI) அறிக்கையின்படி, அதிகப்படியான கொலஸ்ட்ரால் சாப்பிடுவது கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

 

46

சர்க்கரை நோயாளிகளுக்கு வேண்டாம்! 

சர்க்கரை நோயாளிகளின் முட்டை நுகர்வு குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். என்சிபிஐ-இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுபவர்களுக்கு 39% நீரிழிவு ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் முட்டையை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 

56

புற்றுநோயாளிகள் முட்டை சாப்பிடுவதை கருத்தில் கொள்ள வேண்டும். முட்டைகளை அதிக அளவில் உட்கொள்வது பல வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையது என என்.ஐ.எச் செய்த ஆய்வு தெரிவித்துள்ளது. இது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இறப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது. வாரத்திற்கு 5 அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை உண்ணும் பெண்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம். 

இதையும் படிங்க: மங்கிய வெள்ளை ஆடைகள் பளிச்சினு மாறணுமா? துவைக்கும்போது இந்த மாத்திரை பயன்படுத்தினால் கறைகளே இருக்காது

 

 

66

பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்களும் முட்டைகளைத் தவிர்க்க வேண்டும். கோழிகளின் மலத்துடன் தொடர்பு கொள்ளும்போது முட்டை ஓடுகள் பெரும்பாலும் சால்மோனெல்லா பாக்டீரியாவால் மாசுபடுகின்றன. சால்மோனெல்லா ஒரு பாக்டீரியா தொற்று. இது வயிற்றுப்போக்கு, பிடிப்புகள், வாந்தி, காய்ச்சல், தலைவலி மற்றும் குமட்டல் மற்றும் உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. உங்கள் செரிமானம் பலவீனமாக இருந்தால், அசுத்தமான முட்டையை கழுவாமல் பயன்படுத்தும்போது நீங்கள் எளிதாக உணவு விஷத்திற்கு (Food poisoning) ஆளாகலாம். எனவே, எப்போதும் முட்டையை கழுவி சாப்பிடுங்கள். 

இதையும் படிங்க: தலையில் பொடுகு தொல்லையா? முற்றிலும் ஒழித்து கட்ட இந்த ஒரு பொருளை பயன்படுத்துங்கள் போதும்..

About the Author

MP
maria pani
முட்டை நன்மைகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
வழக்கமான சட்னி சாப்பிட்டு சலிச்சு போச்சா? 10 நிமிடத்தில் சுவையான 'காரைக்குடி ஸ்பெஷல்' சட்னி!
Recommended image2
குளிர்ந்த நீரா, வெந்நீரா? சாப்பிட்டதும் நீங்கள் செய்யும் இந்தத் தவறு செரிமானத்தைப் பாதிக்குமா?
Recommended image3
Vatha Kuzhambu Sadam : மணத்தக்காளி வத்தல், சின்ன வெங்காயம் இருந்தால் போதும்..சுவையான வத்தக்குழம்பு சாதம் ரெடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved