MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • தலையில் பொடுகு தொல்லையா? முற்றிலும் ஒழித்து கட்ட இந்த ஒரு பொருளை பயன்படுத்துங்கள் போதும்..

தலையில் பொடுகு தொல்லையா? முற்றிலும் ஒழித்து கட்ட இந்த ஒரு பொருளை பயன்படுத்துங்கள் போதும்..

குளிர்காலத்தில் தலையில் ஏற்படும் பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு எளிமையான தீர்வுகளை இங்கு காணலாம். 

2 Min read
Author : maria pani
Published : Jan 23 2023, 05:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

குளிர்காலங்களில் தலை முடி தொடர்பான பிரச்சனைகள் வாடிக்கையாகிவிட்டது. பொடுகு உங்களுடைய சருமத்தை அரிக்கும். சிலருக்கு முகத்தில் பருக்கள் உண்டாகும். அறிவியல்ரீதியாக சொல்ல வேண்டுமெனில் பொடுகு என்பது அழற்சியற்ற, நாள்பட்ட நிலையாகும். இது உச்சந்தலையில் வரும் பொதுவான தோல் நோயாகும். இதனால் உச்சந்தலை திசு பெரிதும் பாதிக்கப்படுகிறது. 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பொடுகுக்கு காரணம்

பொடுகுக்கு பல காரணங்கள் உண்டு. நமது தலையில் உள்ள எண்ணெய் பசை, மோசமான பராமரிப்பு ஆகிய காரணங்கள் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். உச்சந்தலையில் வாழும் ஒரு குறிப்பிட்ட வகை பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சி பொடுகை ஏற்படுத்தும். ஆனால் பொடுகை முற்றிலும் குறைக்க சில பயனுள்ள குறிப்புகள் உள்ளன. 

35

வேம்பு சாறில் தீர்வு 

உச்சந்தலையை சுத்தம் செய்ய வேம்பு சாறு மிகவும் உதவியாக இருக்கும். இதனால் முடி வளர்ச்சியையும் மேம்படும். பொடுகால் தலையில் அடைபட்ட துளைகளை அழிக்கிறது. வேப்பம்பூவின் பண்புகள் பொடுகைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். வேப்ப இலைச்சாற்றை உச்சந்தலையில் நன்கு தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் பொடுகு ஒழியும். 

45

தயிருடன் நெல்லிக்காய் பொடி 

இந்திய நெல்லிக்காய் என கூறப்படும் ஆம்லாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பொடுகைப் போக்க நெல்லிக்காய் பொடி மிகவும் உதவியாக இருக்கும். தயிரில் ஈஸ்டை கட்டுக்குள் வைத்திருக்கும் 'நட்பு பாக்டீரியா' உள்ளது. பொடுகு தொல்லை நீங்க 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை எடுத்து தயிரில் கலந்து தலையில் தடவுங்கள். இதை வாரம் இருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

இதையும் படிங்க: ஆண்களே ஜாக்கிரதை! இந்த ராசி பெண்கள் திருமணத்திற்கு பிறகும் காதல் செய்வார்களாம்... உங்க துணை என்ன ராசி?

55

மனதை இளகுவாக மாற்றுங்கள் 

நம்முடைய மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. பொடுகை ஏற்படுத்தும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் உங்கள் உடலின் திறனையும் குறைக்கிறது. அடிக்கடி ஏற்படும் மன அழுத்தத்தாலும் பொடுகு ஏற்படுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க நடைப்பயிற்சி அல்லது யோகா, தியானம் செய்யுங்கள். மேற்கண்ட இரண்டு டிப்ஸில் ஏதேனும் ஒன்றை செய்வதோடு, மன அழுத்தத்தையும் குறைத்தால் பொடுகு தொல்லை காணாமல் போகும். 

தலையில் உள்ள பொடுகு பிரச்சனை தீர இரசாயன மருந்துகளை விட இயற்கை வைத்தியம் சிறந்தது. இவை முடியைப் பாதுகாக்கிறது. பொடுகினால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது. இது பூஞ்சை தொற்றுகளையும் தடுக்கிறது. முயன்று பாருங்கள். 

இதையும் படிங்க: அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் தாய் யார் தெரியுமா? மகளுக்கு போட்டியாக அவர் செய்த காரியம்..

About the Author

MP
maria pani
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Growth : முடி வளர்ச்சிக்கு உதவும் 8 ஹேர் கேர் குறிப்புகள்
Recommended image2
Hair Growth Foods: முடி அடர்த்தியாக வளர சாப்பிட வேண்டிய 6 உணவுகள்
Recommended image3
Dandruff Home Remedies: பொடுகை விரட்ட வீட்டிலேயே செய்யக்கூடிய 6 எளிய வழிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved